Song: kanniyar perumai kooRungati - பாடல்: கன்னியர் பெருமை கூறுங்கடி
Movie: mannaadhi mannan - திரைப்படம்: மன்னாதி மன்னன்
Singers: K. Jamunarani, P. Suseela, P.B. Srinivas
பாடியவர்: கே. ஜமுனாராணி, பி. சுசீலா, பி.பி. ஸ்ரீனிவாஸ்
Lyrics: Poet Kannadasan - இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
Music: M.S. Visvanathan, T.K. Ramamurthy
இசை: எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி
Year: - ஆண்டு: 1960

கன்னியர் பெருமை கூறுங்கடி





காடு த்ழைக்க வைத்தா கழனியிலே நடனமிட்டா
ஆடி பதினெட்டிலே ஆடுகிறாள் காவேரி அவள்
பேராலே திருநாளாம் ஆட வாரீர் மங்கையரே
ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ ஓஓஓஓஓ

கன்னியர் பெருமை கூறுங்கடி நம்
காவிரித் தாயை வாழ்த்துங்கடி
கன்னியர் பெருமை கூறுங்கடி நம்
காவிரித் தாயை வாழ்த்துங்கடி
மன்னவர் சோழ மண்டலம் வாழ
மங்கல வாழ்த்துக்கள் பாடுங்கடி
மன்னவர் சோழ மண்டலம் வாழ
மங்கல வாழ்த்துக்கள் பாடுங்கடி
கன்னியர் பெருமை கூறுங்கடி நம்
காவிரித் தாயை வாழ்த்துங்கடி

இளவஞ்சியர் போர் முறை வல்லவனாம் எங்கள்
மாப்பிள்ளை பெயரே வில்லவனாம்
ஓஓஓஓஓஓஓஓ ஓஓஓஓஓஓஓஓஓ ஓஓஓஓஓ
இளவஞ்சியர் போர் முறை வல்லவனாம் எங்கள்
மாப்பிள்ளை பெயரே வில்லவனாம்
கொஞ்சும் தமிழ்க் கொடி எங்கள் குலக்கொடி
கொண்டவன் வாழ்ந்திடப் பாடுங்கடி
கொண்டவன் வாழ்ந்திடப் பாடுங்கடி

கன்னியர் பெருமை கூறுங்கடி நம்
காவிரித் தாயை வாழ்த்துங்கடி

அத்தை மகள் ரத்தினமே முத்து மணிச் சித்திரமே
முன்னழகுத் தாமரையே உன்னருகில் நான் வரவா?
அத்தை மகள் ரத்தினமே முத்து மணிச் சித்திரமே
முன்னழகுத் தாமரையே உன்னருகில் நான் வரவா?
பூமுடிக்க நேரமில்லே பொட்டு வைச்சுப் பார்க்கவில்லே
பூமுடிக்க நேரமில்லே பொட்டு வைச்சுப் பார்க்கவில்லே
சொந்த முறை பேசுவதேன்? வந்த வழி செல்லுமையா
சொந்த முறை பேசுவதேன்? வந்த வழி செல்லுமையா
எந்த வழி சென்றாலும் சொந்த முறை தேடி வரும்
பொன்னியன்னை பெற்ற மக்கள் ஒன்று பட்டு வாழ்ந்திடுவோம்
எந்த வழி சென்றாலும் சொந்த முறை தேடி வரும்
பொன்னி அன்னை பெற்ற மக்கள் ஒன்று பட்டு வாழ்ந்திடுவோம்

ஆடிய ஆட்டம் நினைவிலையோ?
பாடிய பாடல் மறந்தனையோ?
கை விரல் கொண்ட கணையாழி பெரும்
காதல் கதை சொல்லும் என் தோழி
மன்னவர் தமிழ் காண மாட்டாயோ?
மங்கை என் நிலை சொல்லி வாராயோ?
ஆடவர் மனமெல்லாம் கல்லென்பார்
அன்னவர் மனம் கூட அது தானோ?

நாடு பிரிந்து என்னை மாலையிடுவதென சொல்லிய மன்னவரே
நன்றி மறந்து இள மங்கை தனைப் பிரிந்து சென்று மறைந்தீரே
வேறு குலமகளை நாடி மணமுடித்து வாழ்ந்திட நினைத்தீரோ?
காதலிழந்து என்னை மூழ்கிட வைத்தனை காவிரி மேனியிலே
காவிரி மேனியிலே நானினி ஆடிடுவேன் நானினி ஆடிடுவேன்

kaatu dhzhaikka vaiththaa kazhaniyilE natanamittaa
aati padhinettilE aatukiRaaL kaavEri avaL
pEraalE thirunaaLaam aata vaareer mangaiyarE
OOOOOOOOOOOOO OOOOO

kanniyar perumai kooRungati nam
kaavirith thaayai vaazhththungati
kanniyar perumai kooRungati nam
kaavirith thaayai vaazhththungati
mannavar sOzha maNtalam vaazha
mangala vaazhththukkaL paatungati
mannavar sOzha maNtalam vaazha
mangala vaazhththukkaL paatungati
kanniyar perumai kooRungati nam
kaavirith thaayai vaazhththungati

iLavanjiyar pOr muRai vallavanaam engaL
maappiLLai peyarE villavanaam
OOOOOOOO OOOOOOOOO OOOOO
iLavanjiyar pOr muRai vallavanaam engaL
maappiLLai peyarE villavanaam
konjum thamizhk koti engaL kulakkoti
koNtavan vaazhndhitap paatungati
koNtavan vaazhndhitap paatungati

kanniyar perumai kooRungati nam
kaavirith thaayai vaazhththungati

aththai makaL raththinamE muththu maNich chiththiramE
munnazhakuth thaamaraiyE unnarukil naan varavaa?
aththai makaL raththinamE muththu maNich chiththiramE
munnazhakuth thaamaraiyE unnarukil naan varavaa?
poomutikka nEramillE pottu vaichchup paarkkavillE
poomutikka nEramillE pottu vaichchup paarkkavillE
sondha muRai pEsuvadhEn? vandha vazhi sellumaiyaa
sondha muRai pEsuvadhEn? vandha vazhi sellumaiyaa
endha vazhi sendraalum sondha muRai thEti varum
ponniyannai petra makkaL ondru pattu vaazhndhituvOm
endha vazhi sendraalum sondha muRai thEti varum
ponni annai petra makkaL ondru pattu vaazhndhituvOm

aatiya aattam ninaivilaiyO?
paatiya paatal maRandhanaiyO?
kai viral koNta kaNaiyaazhi perum
kaadhal kadhai sollum en thOzhi
mannavar thamizh kaaNa maattaayO?
mangai en nilai solli vaaraayO?
aatavar manamellaam kallenpaar
annavar manam koota adhu thaanO?

naatu pirindhu ennai maalaiyituvadhena solliya mannavarE
nandri maRandhu iLa mangai thanaip pirindhu sendru maRaindheerE
vERu kulamakaLai naati maNamutiththu vaazhndhita ninaiththeerO?
kaadhalizhandhu ennai moozhkita vaiththanai kaaviri mEniyilE
kaaviri mEniyilE naanini aatituvEn naanini aatituvEn

AUDIO LINK (LISTEN TO THE SONG)


Designed and maintained by AKR Consultants