Song: engaLin raaNi - பாடல்: எங்களின் ராணி
Movie: mannaadhi mannan - திரைப்படம்: மன்னாதி மன்னன்
Singers: L.R. Eswari, L.R. Anjali
பாடியவர்: கே. ஜமுனாராணி, எல்.ஆர். அஞ்சலி
Lyrics: Poet Kannadasan - இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
Music: M.S. Visvanathan, T.K. Ramamurthy
இசை: எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி
Year: - ஆண்டு: 1960

எங்களின் ராணி உல்லாசத் தேனீ





எங்களின் ராணி உல்லாசத் தேனீ
அழகிலே மோகினி வீரத்தில் தீரத்தில் அல்லி ராணி
ஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆ
எங்களின் ராணி உல்லாசத் தேனீ
அழகிலே மோகினி வீரத்தில் தீரத்தில் அல்லி ராணி

கருமையாலே மதன் வில்லைப் போலே வரைவோம் அழகாய்ப் புருவம்
வரைவோம் அழகாய்ப் புருவம்
திரை போலே முகம் மலர் மேலே இடுவார் குங்கும திலகம்
இடுவார் குங்கும திலகம்
கலை வண்ணம் மின்னவே கைவண்ணம் காட்டியே
அலங்காரம் செய்குவோம் பரிமள வாடை சூட்டுவோம்
அன்னமே உன்னையே அன்னமே உன்னையே
அன்புடன் வாழ்த்தியே ஆடுவோம்

எங்களின் ராணி உல்லாசத் தேனீ
அழகிலே மோகினி வீரத்தில் தீரத்தில் அல்லி ராணி

நம் பொன்னாடு புகழ் பண்பாடு தினம் கொண்டாடும் உனையே
என்னாளும் இந்தப் புவிமீது உனக்கிணையேது கனியே
மன்னாதி மன்னரும் கண்ணாலே கண்டதும் தன்னாலே மயங்கிடுவார்
அஞ்சியே கெஞ்சியே அஞ்சியே கெஞ்சியே
பம்பரம் போலவே ஆடுவார்

எங்களின் ராணி உல்லாசத் தேனீ
அழகிலே மோகினி வீரத்தில் தீரத்தில் அல்லி ராணி
ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆ

ஆஹஹா ஆஹ ஹாஹஹா ஓஹொஹோ ஹோஹோ
ஆஹஹா ஆஹ ஹாஹஹா ஓஹொஹோ ஹொஹோ

அழகிலும் கலையிலும் மேனகை நிகரென்னும் பல மாது
பணிவிடை புரிந்திடும் போதிலே எனக்கொரு குறையேது
உலகினில் தானே எனக்கிணை நானே உண்மை இதுவே மானே
அறிவாலே திறனாலே எனை யாரும் வெல்ல முடியாது
ஆஆஆஆஆஆஆஆ ஆஆஆஆஆஆஆஆ
எவராலும் என் முன்னே மறு வார்த்தை சொல்ல முடியாது
புதுமைப் பெண்ணே புவியின் கண்ணே
இதை எண்ணி மகிழ்வாய் நீயே இன்ப நிலை காண்பாய் நீயே

லாலாலா லலலாலலா லாலாலா லாலா
லாலாலா லலலாலலா லாலாலா லாலா

engaLin raaNi ullaasath thEnee
azhakilE mOkini veeraththil theeraththil alli raaNi
aaaaaa aaaaaaaa aaaaaaaa aaaaaa
engaLin raaNi ullaasath thEnee
azhakilE mOkini veeraththil theeraththil alli raaNi

karumaiyaalE madhan villaip pOlE varaivOm azhakaaip puruvam
varaivOm azhakaaip puruvam
thirai pOlE mukam malar mElE ituvaar kunguma thilakam
ituvaar kunguma thilakam
kalai vaNNam minnavE kaivaNNam kaattiyE
alangaaram seykuvOm parimaLa vaatai soottuvOm
annamE unnaiyE annamE unnaiyE
anputan vaazhththiyE aatuvOm

engaLin raaNi ullaasath thEnee
azhakilE mOkini veeraththil theeraththil alli raaNi

nam ponnaatu pukazh paNpaatu thinam koNtaatum unaiyE
ennaaLum indhap puvimeedhu unakkiNaiyEdhu kaniyE
mannaadhi mannarum kaNNaalE kaNtadhum thannaalE mayangituvaar
anjiyE kenjiyE anjiyE kenjiyE
pamparam pOlavE aatuvaar

engaLin raaNi ullaasath thEnee
azhakilE mOkini veeraththil theeraththil alli raaNi
aaaaaaaa aaaaaaaa aaaaaaaa aaaaaa

aahahaa aaha haahahaa OhohO hOhO
aahahaa aaha haahahaa OhohO hohO

azhakilum kalaiyilum mEnakai nikarennum pala maadhu
paNivitai purindhitum pOdhilE enakkoru kuRaiyEdhu
ulakinil thaanE enakkiNai naanE uNmai idhuvE maanE
aRivaalE thiRanaalE enai yaarum vella mutiyaadhu
aaaaaaaaaaaaaaaa aaaaaaaaaaaaaaaa
evaraalum en munnE maRu vaarththai solla mutiyaadhu
pudhumaip peNNE puviyin kaNNE
idhai eNNi makizhvaai neeyE inpa nilai kaaNpaai neeyE

laalaalaa lalalaalalaa laalaalaa laalaa
laalaalaa lalalaalalaa laalaalaa laalaa

AUDIO LINK (LISTEN TO THE SONG)


Designed and maintained by AKR Consultants