சிரித்தாலும் அழுதாலும்

பாடியவர்: சி.எஸ். ஜெயராமன்

இயற்றியவர்:

இசை:

திரைப்படம்: களத்தூர் கண்ணம்மா

சிரித்தாலும் அழுதாலும் நிலை ஒன்று தான்
சென்றாலும் நின்றாலும் வழி ஒன்று தான்
வழி ஒன்று தான்
சிரித்தாலும் அழுதாலும் நிலை ஒன்று தான்
சிரித்தாலும் அழுதாலும் நிலை ஒன்று தான்
சென்றாலும் நின்றாலும் வழி ஒன்று தான்
தொடர்ந்தாலும் முடிந்தாலும் கதை ஒன்று தான்
தாழ்ந்தாலும் வாழ்ந்தாலும் தரம் ஒன்று தான்
சிரித்தாலும் அழுதாலும் நிலை ஒன்று தான்

இணைவதிலே இன்பம் பிரிவினிலே துன்பம்
உலகினில் மாறாத நீதி
வருவது போல் வ்ந்து நிலைப்பது போல் நின்று
வருவது போல் வ்ந்து நிலைப்பது போல் நின்று
மறைவது தான் வாழ்வில் பாதி

சிரித்தாலும் அழுதாலும் நிலை ஒன்று தான்

ஆனந்த வெறியேறி ஆயிரம் பொய் கூறும்
மானிட சமுதாய எல்லை - இதில்
தன்னலம் கருதாத தாய்மையை மறவாத
தன்னலம் கருதாத தாய்மையை மறவாத
பெண்மையும் இல்லாமல் இல்லை

சிரித்தாலும் அழுதாலும் நிலை ஒன்று தான்
சென்றாலும் நின்றாலும் வழி ஒன்று தான்
தொடர்ந்தாலும் முடிந்தாலும் கதை ஒன்று தான்
தாழ்ந்தாலும் வாழ்ந்தாலும் தரம் ஒன்று தான்
சிரித்தாலும் அழுதாலும் நிலை ஒன்று தான்

சிரித்தாலும் அழுதாலும் நிலை ஒன்று தான்






Designed and maintained by AKR Consultants