Movie: naan aanaiyittaal - திரைப்படம்: நான் ஆணையிட்டால்
Singers: Seerkazhi Govindarajan - பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன், பி. சுசீலா
Lyrics: Poet Vali - இயற்றியவர்: கவிஞர் வாலி
Music: M.S. Viswanathan, T.K. Ramamoorthy - இசை: எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி
Year: - ஆண்டு: 1966
ஓடிவந்து மீட்பதற்கு உண்மைக்கோ கால்களில்லை
ஓய்ந்திருந்து கேட்பதற்கு நீதிக்கோ நேரமில்லை ஓ ஹோ
பார்த்த நிலை சொல்வதற்கு ப்ரமனுக்கோ உருவமில்லை
பழி சுமந்து செல்வதன்றி இவனுக்கோ பாதையில்லை
மேகங்கள் இருண்டு வந்தால் அதை மழையெனச் சொல்வதுண்டு
மனிதர்கள் திருந்தி வந்தால் அதைப் பிழையெனக் கொள்வதுண்டோ?
நெஞ்சத்தில் நேர்மை வந்தால் அதில் நீதிக்குப் பெருமை உண்டு
வஞ்சகம் தேரில் வந்தால் அதை வணங்கிட முறையும் உண்டோ?
மேகங்கள் இருண்டு வந்தால் அதை மழையெனச் சொல்வதுண்டு
மனிதர்கள் திருந்தி வந்தால் அதைப் பிழையெனக் கொள்வதுண்டோ
தியாகத்தின் தலை நிமிர்ந்தால் இந்தத் தரணிக்கு லாபமுண்டு ஹோ
தீமையின் கை உயர்ந்தால் இங்கு தருமங்கள் வாழ்வதுண்டோ?
அரும்புகள் மலர்ந்து வந்தால் அந்த அழகினை ரசிப்பதுண்டு
பருந்துகள் திருட வந்தால் அந்தப் பண்பினைப் பொறுப்பதுண்டோ?
உண்மைக்குக் காலம் வந்தால் சிலர் உயர்குணம் புரிவதுண்டு
ஊருக்கு நன்மை வந்தால் நல்ல உள்ளங்கள் மகிழ்வதுண்டு
மேகங்கள் இருண்டு வந்தால் அதை மழையெனச் சொல்வதுண்டு
மனிதர்கள் திருந்தி வந்தால் அதைப் பிழையெனக் கொள்வதுண்டோ?
ஓஹோஹோ ஓஹோஹோ ஓஹோஹோ ஓஹோஹோ
Otivandhu meetpadhaRku uNmaikkO kaalkaLillai
Oindhirundhu kEtpadhaRku needhikkO nEramillai O hO
paarththa nilai solvadhaRku pramanukkO uruvamillai
pazhi sumandhu selvadhandri ivanukkO paadhaiyillai
mEkangaL iruNtu vandhaal adhai mazhaiyenach cholvadhuNtu
manidharkaL thirundhi vandhaal adhaip pizhaiyenak koLvadhuNtO?
nenjaththil nErmai vandhaal adhil needhikkup perumai uNtu
vanjakam thEril vandhaal adhai vaNangita muRaiyum uNtO?
mEkangaL iruNtu vandhaal adhai mazhaiyenach cholvadhuNtu
manidharkaL thirundhi vandhaal adhaip pizhaiyenak koLvadhuNtO
thiyaakaththin thalai nimirndhaal indhath tharaNikku laapamuNtu hO
theemaiyin kai uyarndhaal ingu tharumangaL vaazhvadhuNtO?
arumpukaL malarndhu vandhaal andha azhakinai rasippadhuNtu
parundhukaL thiruta vandhaal andhap paNpinaip poRuppadhuNtO?
uNmaikkuk kaalam vandhaal silar uyarkuNam purivadhuNtu
oorukku nanmai vandhaal nalla uLLangaL makizhvadhuNtu
mEkangaL iruNtu vandhaal adhai mazhaiyenach cholvadhuNtu
manidharkaL thirundhi vandhaal adhaip pizhaiyenak koLvadhuNtO?
OhOhO OhOhO OhOhO OhOhO
| This feature is powered by Dishant.com - Home of Indian Music |
