Song: ninaikkum pothe aahaa - பாடல்: நினைக்கும் போதே ஆஹா
Movie: illarame nallaram - திரைப்படம்: இல்லறமே நல்லறம்
Singers: A.M. Raja, Jikki - பாடியவர்: ஏ.எம். ராஜா, ஜிக்கி
Lyrics: A. Maruthakasi - இயற்றியவர்: ஏ. மருதகாசி
Music: K.G. Murthy - இசை: கே.ஜி. மூர்த்தி
Year: - ஆண்டு: 1958





நினைக்கும் போதே ஆஹா இனிக்குதே என் மனமே
நினைக்கும் போதே ஆஹா இனிக்குதே என் மனமே
பயந்து ஓடி வயலில் வீழ்ந்து எடக்குப் பேசி
நின்றதை எண்ணியே இனிக்குதா?
நினைக்கும் போதே ஆஹா இனிக்குதே என் மனமே
பயந்து ஓடி ஓஹோ வயலில் வீழ்ந்து ஆஹா எடக்குப் பேசி
நின்றதை எண்ணியே இனிக்குதா?

கன்னம் சிவந்திடத் தனிமையிலே
காண வந்ததை நினைத்திடுதா?
கன்னம் சிவந்திடத் தனிமையிலே
காண வந்ததை நினைத்திடுதா?
எனையும் காணாமல் தூங்காமல் இருவிழி
இருந்த அந்நாளை என்னு்ள்ளம் மறக்குமா?
குறும்பு செய்து பெண்கள் கையில் பரிசு வாங்கி
நின்றதை எண்ணியே இனிக்குதா?

நினைக்கும் போதே ஆஹா இனிக்குதே என் மனமே
குறும்பு செய்து பெண்கள் கையில் பரிசு வாங்கி
நின்றதை எண்ணியே இனிக்குதா?

வம்பு புரிந்தவர் இடத்தினிலே
வாஞ்சை பிறந்தது கணத்தினிலே
வம்பு புரிந்தவர் இடத்தினிலே
வாஞ்சை பிறந்தது கணத்தினிலே
மனசை வாயாடிப் பெண்பாவை இழுக்குது
மயங்கி ஆணுள்ளம் திண்டாடித் தவிக்குது
மகுடி முன்னே நாகம் போலே
வசியமாகி அன்பினால் இன்பமாய் ஆடுதே

நினைக்கும் போதே ஆஹா இனிக்குதே என் மனமே
மகுடி முன்னே நாகம் போலே
வசியமாகி அன்பினால் இன்பமாய் ஆடுதே

ninaikkum pOdhE aahaa inikkudhE en manamE
ninaikkum pOdhE aahaa inikkudhE en manamE
payandhu Oti vayalil veezhndhu etakkup pEsi
nindradhai eNNiyE inikkudhaa?
ninaikkum pOdhE aahaa inikkudhE en manamE
payandhu Oti OhO vayalil veezhndhu aahaa etakkup pEsi
nindradhai eNNiyE inikkudhaa?

kannam sivandhitath thanimaiyilE
kaaNa vandhadhai ninaiththitudhaa?
kannam sivandhitath thanimaiyilE
kaaNa vandhadhai ninaiththitudhaa?
enaiyum kaaNaamal thoongaamal iruvizhi
irundha annaaLai ennu-LLam maRakkumaa?
kuRumpu seydhu peNkaL kaiyil parisu vaangi
nindradhai eNNiyE inikkudhaa?

ninaikkum pOdhE aahaa inikkudhE en manamE
kuRumpu seydhu peNkaL kaiyil parisu vaangi
nindradhai eNNiyE inikkudhaa?

vampu purindhavar itaththinilE
vaanjai piRandhadhu kaNaththinilE
vampu purindhavar itaththinilE
vaanjai piRandhadhu kaNaththinilE
manasai vaayaatip peNpaavai izhukkudhu
mayangi aaNuLLam thiNtaatith thavikkudhu
makuti munnE naakam pOlE
vasiyamaaki anpinaal inpamaai aatudhE

ninaikkum pOdhE aahaa inikkudhE en manamE
makuti munnE naakam pOlE
vasiyamaaki anpinaal inpamaai aatudhE

This feature is powered by Dishant.com - Home of Indian Music

Designed and maintained by AKR Consultants