Song: ovvoru pookkaLumE solkiRadhE - பாடல்: ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
Movie: Autograph - திரைப்படம்: ஆட்டோகிராஃப்
Singers: K.S. Chithra - பாடியவர்: கே.எஸ். சித்ரா
Lyrics: Pa. Vijay - இயற்றியவர்: ப. விஜய்
Music: Bharatwaj - இசை: பரத்வாஜ்
Year: - ஆண்டு: 2004





ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் போர்க்களமே
ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் போர்க்களமே
ஒவ்வொரு விடியலுமே சொல்கிறதே
இரவானால் பகலொன்று வந்திடுமே

நம்பிக்கை என்பது வேண்டும் நாம் வாழ்வில்
லட்சியம் நிச்சயம் வெல்லும் ஒரு நாளில்
மனமே ஓ மனமே நீ மாறிவிடு
மலையோ அது பனியோ நீ மோதி விடு

ஆஆஆஆஆ ஆஆஆஆஆ ஓஓஓஓஓ ஓஓஓஓஓ

உள்ளம் என்றும் எப்போதும் உடைந்து போகக் கூடாது
என்ன இந்த வாழ்க்கை என்ற எண்ணம் தோன்றக் கூடாது
எந்த மனிதன் நெஞ்சுக்குள் காயம் இல்லை சொல்லுங்கள்
காலப் போக்கில் காயம் எல்லாம் மறைந்து போகும் மாயங்கள்
உளி தாங்கும் கற்கள் தானே மண் மீது சிலையாகும்
வலி தாங்கும் உள்ளம் தானே நிலையான சுகம் காணும்
யாருக்கில்லை போராட்டம் கண்ணில் என்ன நீரோட்டம்
ஒரு கனவு கண்டால் அதை தினம் முயன்றால்
ஒரு நாளில் நிஜமாகும்

மனமே ஓ மனமே நீ மாறிவிடு
மலையோ அது பனியோ நீ மோதி விடு

ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் போர்க்களமே

வாழ்க்கைக் கவிதை வாசிப்போம் வானமளவு யோசிப்போம்
முயற்சி என்ற ஒன்றை மட்டும் மூச்சுப் போல சுவாசிப்போம்
லட்சம் கனவு கண்ணோடு லட்சியங்கள் நெஞ்சோடு
உன்னை வெல்ல யாருமில்லை உறுதியோடு போராடு
மனிதா உன் மனதைக் கீறி விதை போடு மரமாகும்
அவமானம் படுதோல்வி எல்லாமே உறவாகும்
தோல்வி யின்றி வரலாறா? துக்கமில்லை என் தோழா
ஒரு முடிவிருந்தால் அதில் தெளிவிருந்தால்
அந்த வானம் வசமாகும்

மனமே ஓ மனமே நீ மாறிவிடு
மலையோ அது பனியோ நீ மோதி விடு

ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் போர்க்களமே
ஒவ்வொரு விடியலுமே சொல்கிறதே
இரவானால் பகலொன்று வந்திடுமே

நம்பிக்கை என்பது வேண்டும் நாம் வாழ்வில்
லட்சியம் நிச்சயம் வெல்லும் ஒரு நாளில்
மனமே ஓ மனமே நீ மாறிவிடு
மலையோ அது பனியோ நீ மோதி விடு

ovvoru pookkaLumE solkiRadhE
vaazhvendraal pOraatum pOrkkaLamE
ovvoru pookkaLumE solkiRadhE
vaazhvendraal pOraatum pOrkkaLamE
ovvoru vitiyalumE solkiRadhE
iravaanaal pakalondru vandhitumE

nampikkai enpadhu vENtum naam vaazhvil
latchiyam nichchayam vellum oru naaLil
manamE O manamE nee maaRivitu
malaiyO adhu paniyO nee mOdhi vitu

aaaaaaaaaa aaaaaaaaaa OOOOO OOOOO

uLLam endrum eppOdhum utaindhu pOkak kootaadhu
enna indha vaazhkkai endra eNNam thOndrak kootaadhu
endha manidhan nenjukkuL kaayam illai sollungaL
kaalap pOkkil kaayam ellaam maRaindhu pOkum maayangaL
uLi thaangum kaRkaL thaanE maN meedhu silaiyaakum
vali thaangum uLLam thaanE nilaiyaana sukam kaaNum
yaarukkillai pOraattam kaNNil enna neerOttam
oru kanavu kaNtaal adhai thinam muyandraal
oru naaLil nijamaakum

manamE O manamE nee maaRivitu
malaiyO adhu paniyO nee mOdhi vitu

ovvoru pookkaLumE solkiRadhE
vaazhvendraal pOraatum pOrkkaLamE

vaazhkkaik kavidhai vaasippOm vaanamaLavu yOsippOm
muyaRsi endra ondrai mattum moochchup pOla suvaasippOm
latcham kanavu kaNNOtu latchiyangaL nenjOtu
unnai vella yaarumillai uRudhiyOtu pOraatu
manidhaa un manadhaik keeRi vidhai pOtu maramaakum
avamaanam patudhOlvi ellaamE uRavaakum
thOlvi yindri varalaaRaa? thukkamillai en thOzhaa
oru mutivirundhaal adhil theLivirundhaal
andha vaanam vasamaakum

manamE O manamE nee maaRivitu
malaiyO adhu paniyO nee mOdhi vitu

ovvoru pookkaLumE solkiRadhE
vaazhvendraal pOraatum pOrkkaLamE
ovvoru vitiyalumE solkiRadhE
iravaanaal pakalondru vandhitumE

nampikkai enpadhu vENtum naam vaazhvil
latchiyam nichchayam vellum oru naaLil
manamE O manamE nee maaRivitu
malaiyO adhu paniyO nee mOdhi vitu

This feature is powered by Dishant.com - Home of Indian Music

Designed and maintained by AKR Consultants