Movie: Parakkum paavai - திரைப்படம்: பறக்கும் பாவை
Singers: P. Suseela - பாடியவர்: பி. சுசீலா
Lyrics: Poet Kannadasan - இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
Music: M.S. Viswanathan - இசை: எம்.ஸ்ஸ். விஸ்வநாதன்
Year: - ஆண்டு: 1966
யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்?
அம்மம்மா பூமியிலே யாவும் வஞ்சம்
உறவெல்லாம் முள்ளாகும் உயிரெல்லாம் கல்லாகும்
யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்?
வேட்டை ஆடும் மானானேன் வித்தை காட்டும் பொருளானேன்
காட்டில் வாழும் கிளியாகாமல் நாட்டில் வாழும் பெண்ணானேன்
அன்னை பெற்றாள் பெண் என்று அதனால்தானே துயர் இன்று
கண்ணைத் தந்த தெய்வங்களே கருணை தந்தால் ஆகாதோ ஓ ஒ ஓ ஓ
யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்?
அம்மம்மா பூமியிலே யாவும் வஞ்சம்
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ
வாழ்த்தும் கையில் வாளுண்டு போற்றும் மொழியில் விஷமுண்டு
வஞ்சம் சிந்தும் புன்னகையில்லா மனிதர் இங்கே எவருண்டு? ஓ ஓ ஓ ஓ
யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்?
அம்மம்மா பூமியிலே யாவும் வஞ்சம்
உறவெல்லாம் முள்ளாகும் உயிரெல்லாம் கல்லாகும்
உறவெல்லாம் முள்ளாகும் உயிரெல்லாம் கல்லாகும்
yaaraiththaan nampuvadhO pEdhai nenjam?
ammammaa poomiyilE yaavum vanjam
uRavellaam muLLaakum uyirellaam kallaakum
yaaraiththaan nampuvadhO pEdhai nenjam?
vEttai aatum maanaanEn viththai kaattum poruLaanEn
kaattil vaazhum kiLiyaakaamal naattil vaazhum peNNaanEn
annai petraaL peN endru adhanaaldhaanE thuyar indru
kaNNaith thandha theyvangaLE karuNai thandhaal aakaadhO O o O O
yaaraiththaan nampuvadhO pEdhai nenjam?
ammammaa poomiyilE yaavum vanjam
azhakaik kaattum kaNNaati manadhaik kaattak kootaadhO
pazhakumpOdhE nanmai theemai paarththuch chollak kootaadhO
vaazhththum kaiyil vaaLuNtu pOtrum mozhiyil vishamuNtu
vanjam sindhum punnakaiyillaa manidhar ingE evaruNtu? O O O O
yaaraiththaan nampuvadhO pEdhai nenjam?
ammammaa poomiyilE yaavum vanjam
uRavellaam muLLaakum uyirellaam kallaakum
uRavellaam muLLaakum uyirellaam kallaakum
| This feature is powered by Dishant.com - Home of Indian Music |
