Song: kunguma pottu - பாடல்: குங்குமப் பொட்டு குலுங்குதடி
Movie: Ithu sathiyam - திரைப்படம்: இது சத்தியம்
Singers: P.Susheela, S. Janaki - பாடியவர்: பி. சுசீலா, எஸ். ஜானகி
Lyrics: Poet Kannadasan - இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
Music: M.S. Viswanathan, T.K. Ramamurthy - இசை: எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி
Year: - ஆண்டு: 1963

ஆ...ஆ...
குங்குமப் பொட்டு குலுங்குதடி நல்ல கோமள மஞ்சள் விளங்குதடி

மங்கலத் தோற்றம் பொங்கியெழுந்து மகன் வருவதைக் கூறுதடி
மங்கலத் தோற்றம் பொங்கியெழுந்து மகன் வருவதைக் கூறுதடி - ஆஹா
மகன் வருவதைக் கூறுதடி

குங்குமப் பொட்டு குலுங்குதடி நல்ல கோமள மஞ்சள் விளங்குதடி

கண்ணகி வந்து பிறப்பாளோ கற்புக் கவிதை படிப்பாளோ?
நல்ல கற்புக் கவிதை படிப்பாளோ?
கண்ணகி வந்து பிறப்பாளோ கற்புக் கவிதை படிப்பாளோ?
கங்கை கொண்டவன் காவிரிச் சோழன் மங்கை வயிற்றில் உதிப்பானோ?
மங்கை வயிற்றில் உதிப்பானோ ஆஹா மங்கை வயிற்றில் உதிப்பானோ?
சிங்கத்தை வெல்லும் வரதனோ சேரநாட்டு மறவனோ?

கையில் மங்கை தங்கும் எங்கும் பொங்கும் மாமயில் கொண்ட முருகனோ? - ஆஹா
மாமயில் கொண்ட முருகனோ?

குங்குமப் பொட்டு குலுங்குதடி நல்ல கோமள மஞ்சள் விளங்குதடி

பேரிடும் பாட்டன் உருவமோ என்தன் பேரன் குழந்தை அழகனோ?

ஆ...ஆ..
பேரிடும் பாட்டன் உருவமோ என்தன் பேரன் குழந்தை அழகனோ?
என்தன் பேரன் குழந்தை அழகனோ?
பரத நாட்டுத் தலைவன் போலப் பண்பு நிறைந்த தலைவனோ?
பண்பு நிறைந்த தலைவனோ? ஆஹா பண்பு நிறைந்த தலைவனோ?
பக்தி நிறைந்த ஞானியோ பாடித் திரியும் தேனனீயோ நல்ல
கட்டி வெல்லம் எங்கள் வீட்டில் தாவித் திகழ்ந்து தவழுமோ ஆஹா
தாவித் திகழ்ந்து தவழுமோ?

குங்குமப் பொட்டு குலுங்குதடி நல்ல கோமள மஞ்சள் விளங்குதடி
ஆஆ....

ஆ..ஆஅ...
குங்குமப் பொட்டு குலுங்குதடி நல்ல கோமள மஞ்சள் விளங்குதடி
ஆஆ...ஆஅ..

aa...aa...
kungumap pottu kulungudhati nalla kOmaLa manjaL viLangudhati

mangalath thOtram pongiyezhundhu makan varuvadhaik kooRudhati
mangalath thOtram pongiyezhundhu makan varuvadhaik kooRudhati - aahaa
makan varuvadhaik kooRudhati

kungumap pottu kulungudhati nalla kOmaLa manjaL viLangudhati

kaNNaki vandhu piRappaaLO kaRpuk kavidhai patippaaLO?
nalla kaRpuk kavidhai patippaaLO?
kaNNaki vandhu piRappaaLO kaRpuk kavidhai patippaaLO?
kangai koNtavan kaavirich chOzhan mangai vayitril udhippaanO?
mangai vayitril udhippaanO aahaa mangai vayitril udhippaanO?
singaththai vellum varadhanO sEranaattu maRavanO?

kaiyil mangai thangum engum pongum maamayil koNta murukanO? - aahaa
maamayil koNta murukanO?

kungumap pottu kulungudhati nalla kOmaLa manjaL viLangudhati

pEritum paattan uruvamO endhan pEran kuzhandhai azhakanO?

aa...aa..
pEritum paattan uruvamO endhan pEran kuzhandhai azhakanO?
endhan pEran kuzhandhai azhakanO?
paradha naattuth thalaivan pOlap paNpu niRaindha thalaivanO?
paNpu niRaindha thalaivanO? aahaa paNpu niRaindha thalaivanO?
pakdhi niRaindha gnaaniyO paatith thiriyum thEnaneeyO nalla
katti vellam engaL veettil thaavith thikazhndhu thavazhumO aahaa
thaavith thikazhndhu thavazhumO?

kungumap pottu kulungudhati nalla kOmaLa manjaL viLangudhati
aaaa....

aa..aaa...
kungumap pottu kulungudhati nalla kOmaLa manjaL viLangudhati
aaaa...aaa..

This feature is powered by Dishant.com - Home of Indian Music

Designed and maintained by AKR Consultants