Movie: Ithu sathiyam - திரைப்படம்: இது சத்தியம்
Singers: P.Suseela - பாடியவர்: பி. சுசீலா
Lyrics: Poet Kannadasan - இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
Music: M.S. Viswanathan, T.K. Ramamurthy - இசை: எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி
Year: - ஆண்டு: 1963
காதலிலே பற்று வைத்தாள் அன்னையடா அன்னை
காதலிலே பற்று வைத்தாள் அன்னையடா அன்னை
கண்மணியே வரவு வைத்தாள் உன்னையடா உன்னை
எழுதி வைத்தாள் திருடி விட்டார் என்னையடா என்னை
ஏற்றுக் கொண்டாள் ஈன்றெடுத்தாள் பொன்னையடா பொன்னை
காதலிலே பற்று வைத்தாள் அன்னையடா அன்னை
தேவகி வயிற்றில் காரியக் கண்ணன் சிறையில் பிறந்தானே - அவள்
அன்பில் துணைவன் வாசுதேவன் அருகில் இருந்தானே
தேவகி வயிற்றில் காரியக் கண்ணன் சிறையில் பிறந்தானே - அவள்
அன்பில் துணைவன் வாசுதேவன் அருகில் இருந்தானே
என்னரும் மகனே நீ வரும் வேளை தந்தை அருகில்லையே - உன்
இருவிழியழகை நால்விழியாலே காணவும் வழியில்லையே
காணவும் வழியில்லையே
காதலிலே பற்று வைத்தாள் அன்னையடா அன்னை
இருளினில் வாடும் உயிர்களுக்கெல்லாம் நீயே வெண்ணிலவு
இறக்கை இல்லாத பறவைக்கெல்லாம் நீயே பூஞ்சிறகு
இருளினில் வாடும் உயிர்களுக்கெல்லாம் நீயே வெண்ணிலவு
இறக்கை இல்லாத பறவைக்கெல்லாம் நீயே பூஞ்சிறகு - உன்
திருமுகம் ஒன்றே மனையறம் வாழ செய்யும் திருவிளக்கு - இங்கு
தெய்வமும் நீயும் துணை இல்லாவிடில் யாருமில்லை எனக்கு
காதலிலே பற்று வைத்தாள் அன்னையடா அன்னை
கண்மணியே வரவு வைத்தாள் உன்னையடா உன்னை
காதலிலே பற்று வைத்தாள் அன்னையடா அன்னை
ஆரிரரோ ஆரிரரோ ஆராரோ ஆரோ
kaadhalilE patru vaiththaaL annaiyataa annai
kaadhalilE patru vaiththaaL annaiyataa annai
kaNmaNiyE varavu vaiththaaL unnaiyataa unnai
ezhudhi vaiththaaL thiruti vittaar ennaiyataa ennai
Etruk koNtaaL eendretuththaaL ponnaiyataa ponnai
kaadhalilE patru vaiththaaL annaiyataa annai
thEvaki vayitril kaariyak kaNNan siRaiyil piRandhaanE - avaL
anpil thuNaivan vaasudhEvan arukil irundhaanE
thEvaki vayitril kaariyak kaNNan siRaiyil piRandhaanE - avaL
anpil thuNaivan vaasudhEvan arukil irundhaanE
ennarum makanE nee varum vELai thandhai arukillaiyE - un
iruvizhiyazhakai naalvizhiyaalE kaaNavum vazhiyillaiyE
kaaNavum vazhiyillaiyE
kaadhalilE patru vaiththaaL annaiyataa annai
iruLinil vaatum uyirkaLukkellaam neeyE veNNilavu
iRakkai illaadha paRavaikkellaam neeyE poonjiRaku
iruLinil vaatum uyirkaLukkellaam neeyE veNNilavu
iRakkai illaadha paRavaikkellaam neeyE poonjiRaku - un
thirumukam ondrE manaiyaRam vaazha seyyum thiruviLakku - ingu
theyvamum neeyum thuNai illaavitil yaarumillai enakku
kaadhalilE patru vaiththaaL annaiyataa annai
kaNmaNiyE varavu vaiththaaL unnaiyataa unnai
kaadhalilE patru vaiththaaL annaiyataa annai
aarirarO aarirarO aaraarO aarO
| This feature is powered by Dishant.com - Home of Indian Music |