Song: aasai koNta nenjiraNtu - பாடல்: ஆசை கொண்ட நெஞ்சிரண்டு
Movie: irumbu-thirai - திரைப்படம்: இரும்புத் திரை
Singers: P. Leela - பாடியவர்: பி. லீலா
Lyrics: Pattukottai Kalyanasundaram - இயற்றியவர்: பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம்
Music: S.V. Venkataraman - இசை: எஸ்.வி. வெங்கடராமன்
Year: - ஆண்டு: 1960

ஆசை கொண்ட நெஞ்சிரண்டு பேசுகின்ற போது
ஆடாத சிலைகளும் ஆடாதோ ஆனந்த கீதங்கள் பாடாதோ?
ஆசை கொண்ட நெஞ்சிரண்டு பேசுகின்ற போது
ஆடாத சிலைகளும் ஆடாதோ ஆனந்த கீதங்கள் பாடாதோ?

ஆடலுக்கும் பாடலுக்கும் ஊது குழல் யாழினுக்கும்
ஆதாரமானது தாளம்
ஆடலுக்கும் பாடலுக்கும் ஊது குழல் யாழினுக்கும்
ஆதாரமானது தாளம்
ஊடலுக்கும் காதலுக்கும் உண்மை அன்புக் கூடலுக்கும்
உகந்தது வாலிபக் காலம்
ஊடலுக்கும் காதலுக்கும் உண்மை அன்புக் கூடலுக்கும்
உகந்தது வாலிபக் காலம்

ஆசை கொண்ட நெஞ்சிரண்டு பேசுகின்ற போது
ஆடாத சிலைகளும் ஆடாதோ ஆனந்த கீதங்கள் பாடாதோ?

ஆஆஆஆஆஆஆஆஆ ஆஆஆஆஆஆஆஆஆஆ

வண்டுலாவும் மலர்ச் சோலையிலே தென்றல்
வந்துலாவுகின்ற வேளையிலே - வாழைக்
கன்று போல் உருவம் கொண்ட ஆணொருவன்
நின்று போட்ட ஒரு பார்வையிலே - என்னைக்
கொன்று விட்டானடி மாமயிலே

ஆசை கொண்ட நெஞ்சிரண்டு பேசுகின்ற போது
ஆடாத சிலைகளும் ஆடாதோ ஆனந்த கீதங்கள் பாடாதோ?

ஆஆஆஆஆஆஆஆ ஆஆஆஆஆஆஆஆ

இதையும் அதையும் கண்டு மதியும் மயக்கம் கொண்டு
இதயக் கதவை வந்து தட்டுதே
எண்ணம் இமயச் சிகரம் தன்னை எட்டுதே
எண்ணம் இமயச் சிகரம் தன்னை எட்டுதே
அதிகத் துணிவு கொண்டு ஆசை கரை புரண்டு
அதிரத் தலை சுழன்று சுற்றுதே தினமும்
அனலை உடலில் வாரிக் கொட்டுதே

ஆசை கொண்ட நெஞ்சிரண்டு பேசுகின்ற போது
ஆடாத சிலைகளும் ஆடாதோ ஆனந்த கீதங்கள் பாடாதோ?
ஆசை கொண்ட நெஞ்சிரண்டு பேசுகின்ற போது
ஆடாத சிலைகளும் ஆடாதோ ஆனந்த கீதங்கள் பாடாதோ?

aasai koNta nenjiraNtu pEsukindra pOdhu
aataadha silaikaLum aataadhO aanandha keedhangaL paataadhO?
aasai koNta nenjiraNtu pEsukindra pOdhu
aataadha silaikaLum aataadhO aanandha keedhangaL paataadhO?

aatalukkum paatalukkum oodhu kuzhal yaazhinukkum
aadhaaramaanadhu thaaLam
aatalukkum paatalukkum oodhu kuzhal yaazhinukkum
aadhaaramaanadhu thaaLam
ootalukkum kaadhalukkum uNmai anpuk kootalukkum
ukandhadhu vaalipak kaalam
ootalukkum kaadhalukkum uNmai anpuk kootalukkum
ukandhadhu vaalipak kaalam

aasai koNta nenjiraNtu pEsukindra pOdhu
aataadha silaikaLum aataadhO aanandha keedhangaL paataadhO?

aaaaaaaaaaaaaaaaaa aaaaaaaaaaaaaaaaaaaa

vaNtulaavum malarch chOlaiyilE thendral
vandhulaavukindra vELaiyilE - vaazhaik
kandru pOl uruvam koNta aaNoruvan
nindru pOtta oru paarvaiyilE - ennaik
kondru vittaanati maamayilE

aasai koNta nenjiraNtu pEsukindra pOdhu
aataadha silaikaLum aataadhO aanandha keedhangaL paataadhO?

aaaaaaaaaaaaaaaa aaaaaaaaaaaaaaaa

idhaiyum adhaiyum kaNtu madhiyum mayakkam koNtu
idhayak kadhavai vandhu thattudhE
eNNam imayach chikaram thannai ettudhE
eNNam imayach chikaram thannai ettudhE
adhikath thuNivu koNtu aasai karai puraNtu
adhirath thalai suzhandru sutrudhE thinamum
analai utalil vaarik kottudhE

aasai koNta nenjiraNtu pEsukindra pOdhu
aataadha silaikaLum aataadhO aanandha keedhangaL paataadhO?
aasai koNta nenjiraNtu pEsukindra pOdhu
aataadha silaikaLum aataadhO aanandha keedhangaL paataadhO?

This feature is powered by Dishant.com - Home of Indian Music

Designed and maintained by AKR Consultants