Song: odivadhu poal - பாடல்: ஒடிவது போல் இடை இருக்கும்
Movie: ithayathil nee - திரைப்படம்: இதயத்தில் நீ
Singers: P.B. Rsinivas - பாடியவர்: பி.பி. ஸ்ரீனிவாஸ்
Lyrics: Vali - இயற்றியவர்: வாலி
Music: M.S. Viswanathan - இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
Year: - ஆண்டு: 1960

ஒடிவது போல் இடை இருக்கும் இருக்கட்டுமே ஹோய் - அது
ஒய்யார நடை நடக்கும் நடக்கட்டுமே ஹோய் - ஆஹா
ஒடிவது போல் இடை இருக்கும் இருக்கட்டுமே ஹோய் - அது
ஒய்யார நடை நடக்கும் நடக்கட்டுமே

சுடுவது போல் கண் சிவக்கும் சிவக்கட்டுமே - கண்
சுட்டு விட்டால் கவி பிறக்கும் பிறக்கட்டுமே கண்
சுட்டு விட்டால் கவி பிறக்கும் பிறக்கட்டுமே - ஆஹா

ஒடிவது போல் இடை இருக்கும் இருக்கட்டுமே - அது
ஒய்யார நடை நடக்கும் நடக்கட்டுமே

தொடுவது போல் கை துடிக்கும் துடிக்கட்டுமே - இளம்
தோகை நெஞ்சில் இடம் பிடிக்கும் பிடிக்கட்டுமே - - இளம்
தோகை நெஞ்சில் இடம் பிடிக்கும் பிடிக்கட்டுமே - ஆஹா
தொடர்வது போல் கால் தொடரும் தொடரடடுமே - கொஞ்சம்
தொடர்ந்து வந்தால் கொடி படரும் படரட்டுமே

கொடி மலர் போல் இதழ் விரியும் விரியட்டுமே - அது
குளிர் நிலவாய் நகை புரியும் புரியட்டுமே - அது
குளிர் நிலவாய் நகை புரியும் புரியட்டுமே

ஆஹாஹா ஆஹஹஹஹா





This feature is powered by Dishant.com - Home of Indian Music

Designed and maintained by AKR Consultants