பாகப்பிரிவினை - Baga pirivinai

Song: otrumaiyaai vaazhvadhaalE - பாடல்: ஒற்றுமையாய் வாழ்வதாலே
Movie: Baga pirivinai- திரைப்படம்: பாகப்பிரிவினை
Singers: T.M. Soundararajan - பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
Lyrics: Maruthakasi - இயற்றியவர்: மருதகாசி
Music: M.S. Viswanathan, T.K. Ramamoorthy - இசை: எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி
Year: - ஆண்டு: 1959





மந்தரையின் போதனையால் மனம் மாறிக் கைகேயி
மஞ்சள் குங்குமம் இழந்தாள்
வஞ்சக சகுனியின் சேர்க்கையால் கௌரவர்கள்
பஞ்ச பாண்டவரைப் பகைத்து அழிந்தார்
சிந்தனையில் இதையெல்லாம் சிறிதேனும் கொள்ளாமல்
மனிதரெல்லாம் மந்த மதியால் அறிவு மயங்கி
மனம் போன படி நடக்கலாமோ? ஓ...

ஒற்றுமையாய் வாழ்வதாலே உண்டு நன்மையே
வேற்றுமையை வளர்ப்பதாலே விளையும் தீமையே

உணர்வோடு ஒன்றியே உருவாகும் பாசமே
அணையாத தீபமாய் சுடரெங்கும் வீசுமே நெஞ்சில்
உண்டான அன்பையே துண்டாடி வம்பையே
உறவாகத் தந்திடும் சிலர் சொல்லை நம்பியே
வேற்றுமையை வளர்ப்பதாலே விளையும் தீமையே

ஒற்றுமையாய் வாழ்வதாலே உண்டு நன்மையே
வேற்றுமையை வளர்ப்பதாலே விளையும் தீமையே

துணையின்றி வெண்புறா தனியாக வந்ததே
வனவேடன் வீசிய வலைதன்னில் வீழ்ந்ததே
இனம் யாவும் சேர்ந்து தான் அதை மீட்டுச் சென்றதே
கதையான போதிலும் கருத்துள்ள பாடமே

ஒற்றுமையாய் வாழ்வதாலே உண்டு நன்மையே
வேற்றுமையை வளர்ப்பதாலே விளையும் தீமையே

mandharaiyin pOdhanaiyaal manam maaRik kaikEyi
manjaL kungumam izhandhaaL
vanjaka sakuniyin sErkkaiyaal kowravarkaL
panja paaNtavaraip pakaiththu azhindhaar
sindhanaiyil idhaiyellaam siRidhEnum koLLaamal
manidharellaam mandha madhiyaal aRivu mayangi
manam pOna pati natakkalaamO? O...

otrumaiyaai vaazhvadhaalE uNtu nanmaiyE
vEtrumaiyai vaLarppadhaalE viLaiyum theemaiyE

uNarvOtu ondriyE uruvaakum paasamE
aNaiyaadha theepamaai sutarengum veesumE nenjil
uNtaana anpaiyE thuNtaati vampaiyE
uRavaakath thandhitum silar sollai nampiyE
vEtrumaiyai vaLarppadhaalE viLaiyum theemaiyE

otrumaiyaai vaazhvadhaalE uNtu nanmaiyE
vEtrumaiyai vaLarppadhaalE viLaiyum theemaiyE

thuNaiyindri veNpuRaa thaniyaaka vandhadhE
vanavEtan veesiya valaidhannil veezhndhadhE
inam yaavum sErndhu thaan adhai meettuch chendradhE
kadhaiyaana pOdhilum karuththuLLa paatamE

otrumaiyaai vaazhvadhaalE uNtu nanmaiyE
vEtrumaiyai vaLarppadhaalE viLaiyum theemaiyE

This feature is powered by Dishant.com - Home of Indian Music

Designed and maintained by AKR Consultants