Movie: aayiram poi - திரைப்படம்: ஆயிரம் பொய்
Singers: T.M. Soundararajan - பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன், பி. சுசீலா
Lyrics: Poet Kannadasan - இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
Music: V. Kumar - இசை: வி. குமார்
Year: - ஆண்டு: 1969
புலவர் சொன்னதும் பொய்யே பொய்யே ஆஹாஹாஹா
பூவையர் ஜாடையும் பொய்யே பொய்யே
கலைகள் சொன்னதும் பொய்யே பொய்யே ஆஆஆ
காதல் ஒன்று தான் மெய்யே மெய்யே
அழகு என்பதும் மெய்யே மெய்யே ஓஹோ
ஆசை என்பதும் மெய்யே மெய்யே
பழகும் நோக்கமும் மெய்யே மெய்யே - உங்கள்
பாஷை ஒன்று தான் பொய்யே பொய்யே
புலவர் சொன்னதும் பொய்யே பொய்யே
நீலக் கண்கள் தாமரை போல் சிவப்பதெப்போது?
நினைவில்லாமல் மாரிபிலே மயங்கும் போது
வார்த்தை ஜாலம் பேச்சிலே வருவதெப்போது?
மங்கையின் மடியிலே புரளும் போது ஆ
ஆயிரம் பொய் சொன்னால் காரியமாகும்
அந்த நாளில் அது தானே காவியமாகும்
அழகு என்பதும் மெய்யே மெய்யே அஹா
ஆசை என்பதும் மெய்யே மெய்யே
பழகும் நோக்கமும் மெய்யே மெய்யே - உங்கள்
பாஷை ஒன்று தான் பொய்யே பொய்யே
புலவர் சொன்னதும் பொய்யே பொய்யே
என்ன தான் பெண்ணிடத்தில் இத்தனை இன்பம்?
இங்கு தான் தோன்றியது முத்தமிழ் சங்கம்
ஆஆஆஆ ஆஆஆ ஆஆஆஆஆ
பொன்னிலே தோய்த்தெடுத்த பூவையர் அங்கம்
போதையில் ஆட வைக்கும் ஆடவர் அங்கம்
தேன்நிலவு காண்பதற்கு தேடுது நெஞ்சம்
வான்நிலவின் கீழிருந்து வாடுது மஞ்சம்
புலவர் சொன்னதும் பொய்யே பொய்யே ஆஹாஹாஹா
பூவையர் ஜாடையும் பொய்யே பொய்யே
கலைகள் சொன்னதும் பொய்யே பொய்யே ஆஆஆ
காதல் ஒன்று தான் மெய்யே மெய்யே ம்ம்
புலவர் சொன்னதும் பொய்யே பொய்யே
pulavar sonnadhum poiyE poiyE aahaahaahaa
poovaiyar jaataiyum poiyE poiyE
kalaikaL sonnadhum poiyE poiyE aaaaaa
kaadhal ondru thaan meyyE meyyE
azhaku enpadhum meyyE meyyE OhO
aasai enpadhum meyyE meyyE
pazhakum nOkkamum meyyE meyyE - ungaL
paashai ondru thaan poiyE poiyE
pulavar sonnadhum poiyE poiyE
neelak kaNkaL thaamarai pOl sivappadheppOdhu?
ninaivillaamal maaripilE mayangum pOdhu
vaarththai jaalam pEchchilE varuvadheppOdhu?
mangaiyin matiyilE puraLum pOdhu aa
aayiram poi sonnaal kaariyamaakum
andha naaLil adhu thaanE kaaviyamaakum
azhaku enpadhum meyyE meyyE ahaa
aasai enpadhum meyyE meyyE
pazhakum nOkkamum meyyE meyyE - ungaL
paashai ondru thaan poiyE poiyE
pulavar sonnadhum poiyE poiyE
enna thaan peNNitaththil iththanai inpam?
ingu thaan thOndriyadhu muththamizh sangam
aaaaaaaa aaaaaa aaaaaaaaaa
ponnilE thOiththetuththa poovaiyar angam
pOdhaiyil aata vaikkum aatavar angam
thEnnilavu kaaNpadhaRku thEtudhu nenjam
vaannilavin keezhirundhu vaatudhu manjam
pulavar sonnadhum poiyE poiyE aahaahaahaa
poovaiyar jaataiyum poiyE poiyE
kalaikaL sonnadhum poiyE poiyE aaaaaa
kaadhal ondru thaan meyyE meyyE mm
pulavar sonnadhum poiyE poiyE
புலவர் சொன்னதும் பொய்யே பொய்யே - pulavar sonnadhum poiyE poiyE
