கண்ணாலே பேசிப் பேசிக் கொல்லாதே

பாடியவர்: P.B. ஸ்ரீனிவாஸ்

இயற்றியவர்: T.N. ராமையாதாஸ்

இசை: P. ஆதிநாராயண ராவ்

திரைப்படம்: அடுத்த வீட்டுப் பெண்

அஹாஹஹாஹா ஹாஹஹஹா
அஹஹாஹா ஆஹாஹஹஹஹா
ஹஹாஹஹா ஹஹாஹஹா
அஹஹாஹா ஹஹஹஹஹா ஹஹஹஹஹா

கண்ணாலே பேசிப் பேசிக் கொல்லாதே
காதாலே கேட்டுக் கேட்டுச் செல்லாதே
காதல் தெய்வீக ராணி போதை உண்டாகுதே நீ
கண்ணே என் மனதை விட்டுத் துள்ளாதே
கண்ணாலே பேசிப் பேசிக் கொல்லாதே

பாசமீறி சித்ரதாளம் போடுதே - உன்
பக்தன் உள்ளம் நித்தம் ஏங்கி வாடுதே
ஆசை வெட்கமறியாமல் ஓடுதே - என்
அன்னமே உன் சின்ன ஜடை ஆடுதே

காதல் தெய்வீக ராணி போதை உண்டாகுதே நீ
கண்ணே என் மனதை விட்டுத் துள்ளாதே
கண்ணாலே பேசிப் பேசிக் கொல்லாதே

பதுமை போலக் காணும் உன்தன் அழகிலே - நான்
படகு போலத் தத்தளிக்கும் நிலையிலே
மதுவை ஏந்திக் கொந்தளிக்கும் மலரிலே - என்
மதிமயங்கி வீழ்ந்தேன் உன் வலையிலே

காதல் தெய்வீக ராணி போதை உண்டாகுதே நீ
கண்ணே என் மனதை விட்டுத் துள்ளாதே
கண்ணாலே பேசிப் பேசிக் கொல்லாதே

அஹாஹஹாஹ ஹஹஹஹா
அஹஹாஹா ஆஹஹஹா ஹஹாஹஹா

கண்ணாலே பேசிப் பேசிக் கொல்லாதே






Designed and maintained by AKR Consultants