கண்ணான கண்ணனுக்கு அவசரமா

பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன் பி. சுசீலா

இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்

இசை: எம்.எஸ். விஸ்வநாதன்

திரைப்படம்: ஆலயமணி

வானம்பாடி.. ஆஹாஹஹா ஓ
கண்ணான கண்ணனுக்கு அவசரமா கொஞ்சம்
பின்னாலே பார்க்கவும் முடியலையா?
கண்ணான கண்ணனுக்கு அவசரமா கொஞ்சம்
பின்னாலே பார்க்கவும் முடியலையா?
பெண்ணழகு சிரிப்பதும் தெரியலையா? அது
பேசாமல் பேசுவது கேட்கலையா?
கண்ணான கண்ணனுக்கு அவசரமா கொஞ்சம்
பின்னாலே பார்க்கவும் முடியலையா?

பொன்னான கண்மணிக்குப் புரியாதா? - கொஞ்சம்
முன்னாலே வந்தாலே தெரியாதா?
பொன்னான கண்மணிக்குப் புரியாதா? - கொஞ்சம்
முன்னாலே வந்தாலே தெரியாதா?
கண்ணழகை நான் காணக் கூடாதா?
கண்ணழகை நான் காணக் கூடாதா?
கல்யாணத் தேரோடக் கூடாதா?
பொன்னான கண்மணிக்குப் புரியாதா? - கொஞ்சம்
முன்னாலே வந்தாலே தெரியாதா?

உள்ளத்தில் வீடு கட்டி உள்ளே ஓர் தொட்டில் கட்டி
பிள்ளையினைப் போலே உன்னைத் தாலாட்டவா?
ஆரிராராரோ ஆரிராராரோ ஆரிராராரோ ஆரிராராரோ
உள்ளத்தில் வீடு கட்டி உள்ளே ஓர் தொட்டில் கட்டி
பிள்ளையினைப் போலே உன்னைத் தாலாட்டவா?
பிள்ளையினைப் போலே உன்னைத் தாலாட்டவா?
கன்னந்தனில் முத்தம் இட்டு கண்ணிரண்டில் கண்ணை வைத்து
சின்னப் பிள்ளை போலே நானும் வாலாட்டவா?
சின்னப் பிள்ளை போலே நானும் வாலாட்டவா? ஓ..

கண்ணான கண்ணனுக்கு அவசரமா கொஞ்சம்
பின்னாலே பார்க்கவும் முடியலையா?
பொன்னான கண்மணிக்குப் புரியாதா? - கொஞ்சம்
முன்னாலே வந்தாலே தெரியாதா?

மஞ்சத்தில் உன்னை வைத்து மல்லிகை முல்லை வைத்து
கொஞ்சுமொழி பேசி வந்து நானாடவா?
கொஞ்சுமொழி பேசி வந்து நானாடவா?
அந்த மலர் வாடுமென்று சொந்த மலர் வேண்டுமென்று
இந்த மலர் வண்ணங்கண்டு நான் பாடவா?
இந்த மலர் வண்ணங்கண்டு நான் பாடவா?

கண்ணான கண்ணனுக்கு அவசரமா கொஞ்சம்
பின்னாலே பார்க்கவும் முடியலையா?
பெண்ணழகு சிரிப்பதும் தெரியலையா? அது
பேசாமல் பேசுவது கேட்கலையா?
கண்ணான கண்ணனுக்கு அவசரமா கொஞ்சம்
பின்னாலே பார்க்கவும் முடியலையா?

கண்ணான கண்ணனுக்கு அவசரமா






Designed and maintained by AKR Consultants