தனிமையிலே இனிமை காண முடியுமா?
பாடியவர்: ஏ.எம். ராஜா, பி. லீலா
இயற்றியவர்: கண்ணதாசன்
இசை: ஏ.எம். ராஜா
திரைப்படம்: ஆடிப்பெருக்கு
தனிமையிலே தனிமையிலே
தனிமையிலே இனிமை காண முடியுமா?
நல்லிரவினிலே சூரியனும் தெரியுமா?
தனிமையிலே இனிமை காண முடியுமா?
துணை இல்லாத வாழ்வினிலே சுகம் வருமா? - அதை
சொல்லி சொல்லிப் பிரிவதனால் துணை வருமா?
துணை இல்லாத வாழ்வினிலே சுகம் வருமா? - அதை
சொல்லி சொல்லிப் பிரிவதனால் துணை வருமா?
மனமிருந்தால் வழி இல்லாமல் போகுமா
மனமிருந்தால் வழி இல்லாமல் போகுமா - வெறும்
மந்திரத்தால் மாங்காய் வீழ்ந்திடுமா? தனிமையிலே
தனிமையிலே இனிமை காண முடியுமா?
நல்லிரவினிலே சூரியனும் தெரியுமா?
தனிமையிலே இனிமை காண முடியுமா?
மலர் இருந்தால் மணம் இருக்கும் தனிமையில்லை - செங்
கனி இருந்தால் சுவை இருக்கும் தனிமை இல்லை
மலர் இருந்தால் மணம் இருக்கும் தனிமையில்லை - செங்
கனி இருந்தால் சுவை இருக்கும் தனிமை இல்லை
கடல் இருந்தால் அலை இருக்கும் தனிமை இல்லை
கடல் இருந்தால் அலை இருக்கும் தனிமை இல்லை - நாம்
காணும் உலகில் ஏதும் தனிமை இல்லை தனிமையிலே
தனிமையிலே இனிமை காண முடியுமா?
நல்லிரவினிலே சூரியனும் தெரியுமா?
தனிமையிலே இனிமை காண முடியுமா?
பனி மலையில் தவமிருக்கும் மாமுனியும் - கொடி
படையுடனே பவனி வரும் காவலனும்
கவிதையிலே நிலை மறக்கும் பாவலனும் - இந்த
அவனி எல்லாம் போற்றும் ஆண்டவானாயினும் தனிமையிலே
தனிமையிலே இனிமை காண முடியுமா?
