கண்ணிழந்த மனிதர் முன்னே
பாடியவர்: ஏ.எம். ராஜா, பி. சுசீலா
இயற்றியவர்: கண்ணதாசன்
இசை: ஏ.எம். ராஜா
திரைப்படம்: ஆடிப்பெருக்கு
கண்ணிழந்த மனிதர் முன்னே ஓவியம் வைத்தார்
கண்ணிழந்த மனிதர் முன்னே ஓவியம் வைத்தார் - இரு
காதில்லாத மனிதர் முன்னே பாடலிசைத்தார் பாடலிசைத்தார்
கண்ணிருந்தும் ஓவியத்தைக் காட்டி மறைத்தார் - இரு
காதிருந்தும் பாதியிலே பாட்டை முடித்தார் பாட்டை முடித்தார்
ஆட வந்த மேடையிலே முள்ளை வளர்த்தார்
அணைக்க வந்த கரங்களுக்குத் தடையை விதித்தார்
ஆட வந்த மேடையிலே முள்ளை வளர்த்தார்
அணைக்க வந்த கரங்களுக்குத் தடையை விதித்தார்
சாய்ந்து விட்ட மரத்தினிலே கொடியை இணைத்தார்
தாவி வந்த பைங்கிளியின் சிறகை ஒடித்தார்
கண்ணிழந்த மனிதர் முன்னே ஓவியம் வைத்தார்
கண்ணிருந்தும் ஓவியத்தைக் காட்டி மறைத்தார் காட்டி மறைத்தார்
பெண் பெருமை பேசிப் பேசிக் காலம் கழிப்பார்
தன் பெருமை குலையுமென்றால் பெண்ணை அழிப்பார்
பெண் பெருமை பேசிப் பேசிக் காலம் கழிப்பார்
தன் பெருமை குலையுமென்றால் பெண்ணை அழிப்பார்
முன்னுமில்லை பின்னுமில்லி முடிவுமில்லையே
மூடர் செய்த விதிகளுக்குத் தெளிவுமில்லையே
கண்ணிழந்த மனிதர் முன்னே ஓவியம் வைத்தார் - இரு
காதில்லாத மனிதர் முன்னே பாடலிசைத்தார் பாடலிசைத்தார்
கண்ணிழந்த மனிதர் முன்னே ஓவியம் வைத்தார்