ஏச்சிப் பிழைக்கும் தொழிலே
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன், ஜிக்கி
இயற்றியவர்: கண்ணதாசன்
இசை: ஜி. ராமநாதன்
திரைப்படம்: மதுரை வீரன்
ஏச்சிப் பிழைக்கும் தொழிலே சரிதானா
எண்ணிப் பாருங்க
ஏச்சிப் பிழைக்கும் தொழிலே சரிதானா
எண்ணிப் பாருங்க ஐயா எண்ணிப் பாருங்க
ஐயா எண்ணிப் பாருங்க
நாச்சியப்பா சங்கிலிக் கருப்பா
பூச்சி காட்டும் போக்கிரி சுப்பா
நாச்சியப்பா சங்கிலிக் கருப்பா
பூச்சி காட்டும் போக்கிரி சுப்பா
மூட்டையடிச்சா உனையே விடுவானா
நெனச்சிப் பாருங்க
மூட்டையடிச்சா உனையே விடுவானா
நெனச்சிப் பாருங்க நலலா
நெனச்சிப் பாருங்க நல்லா
நெனச்சிப் பாருங்க
தேட்டை போடும் புள்ளிகளெல்லாம்
கோட்டை விட்டுக் கம்பி எண்ணணும்
சிறையில் கம்பி எண்ணணும்
தேட்டை போடும் புள்ளிகளெல்லாம்
கோட்டை விட்டுக் கம்பி எண்ணணும்
பூட்டை உடைக்கும் புலியே இதை நீங்க
புரிஞ்சு கொள்ளுங்க பூட்டை உடைக்கும்
பூட்டை உடைக்கும் பூட்டை உடைக்கும்
பூட்டை உடைக்கும் புலியே இதை நீங்க
புரிஞ்சு கொள்ளுங்க நீங்க புரிநு கொள்ளுங்க
நீங்க புரிஞ்சு கொள்ளுங்க
காலமெல்லாம் வ்ழிப்பறிக் கொள்ளை
கன்னம் போட்டுப் பிழைப்பதும் தொல்லை
காலமெல்லாம் வ்ழிப்பறிக் கொள்ளை
கன்னம் போட்டுப் பிழைப்பதும் தொல்லை
கனவில் கூட வேண்டாம் ஐயா நல்லாக் கேளுங்க
கனவில் கூட வேண்டாம் ஐயா நல்லாக் கேளுங்க
ஐயா நல்லாக் கேளுங்க ஐயா நல்லாக் கேளுங்க
ஊரை அடிச்சுப் பிழைக்கவும் வேண்டாம்
ஊரை அடிச்சுப் பிழைக்கவும் வேண்டாம்
யாருக்கும் நீ பயப்பட வேண்டாம்
ஊரை அடிச்சுப் பிழைக்கவும் வேண்டாம்
யாருக்கும் நீ பயப்பட வேண்டாம்
ஏரைப் பிடிச்சி மானம் பெரிதாய்
வாழ வேணுங்க
ஏரைப் பிடிச்சி மானம் பெரிதாய்
வாழ வேணுங்க நாமே
வாழ வேணுங்க நாமே வாழ வேணுங்க
ஏச்சிப் பிழைக்கும் தொழிலே சரிதானா
எண்ணிப் பாருங்க ஐயா எண்ணிப் பாருங்க
ஐயா எண்ணிப் பாருங்க
