நாதர் முடி மேலிருக்கும் நல்ல பாம்பே

பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்

இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்

இசை: கே.வி. மஹாதேவன்

திரைப்படம்: திருவருட் செல்வர்

நாதர் முடி மேலிருக்கும் நல்ல பாம்பே
நாதர் முடி மேலிருக்கும் நல்ல பாம்பே - உனக்கு
நல்ல பெயர் வைத்தவர் யார் சொல்லு பாம்பே
நாதர் முடி மேலிருக்கும் நல்ல பாம்பே - உனக்கு
நல்ல பெயர் வைத்தவர் யார் சொல்லு பாம்பே
ஆதிசிவன் தலையமர்ந்த ஆணவமா?
ஆதிசிவன் தலையமர்ந்த ஆணவமா? - அவன்
அங்கமெல்லாம் விளையாடும் தைரியமா? - அவன்
அங்கமெல்லாம் விளையாடும் தைரியமா?
நாதர் முடி மேலிருக்கும் நல்ல பாம்பே உனக்கு
நல்ல பெயர் வைத்தவர் யார் சொல்லு பாம்பே

ஊர் கொடுத்த பால் குடித்து உயிர் வளர்த்தாய் - பால்
உண்ட சுவை மாறுமுன்னே நன்றி மறந்தாய்
ஊர் கொடுத்த பால் குடித்து உயிர் வளர்த்தாய் - பால்
உண்ட சுவை மாறுமுன்னே நன்றி மறந்தாய்
வஞ்சமற்ற தொண்டருக்கே வஞ்சனை செய்தாய்
வஞ்சமற்ற தொண்டருக்கே வஞ்சனை செய்தாய் - அவர்
பிஞ்சு மகன் நெஞ்சினுக்கே நஞ்சு கொடுத்தாய் - அவர்
பிஞ்சு மகன் நெஞ்சினுக்கே நஞ்சு கொடுத்தாய்

பெயருக்குத் தகுந்தாற்போல் மாறிவிடு - எங்கள்
பிள்ளையை மறுபடியும் வாழவிடு
பெயருக்குத் தகுந்தாற்போல் மாறிவிடு - எங்கள்
பிள்ளையை மறுபடியும் வாழவிடு

நெஞ்சம் மாறிவிடு பிள்ளையை வாழவிடு
நெஞ்சம் மாறிவிடு பிள்ளையை வாழவிடு
நெஞ்சம் மாறிவிடு பிள்ளையை வாழவிடு
நெஞ்சம் மாறிவிடு பிள்ளையை வாழவிடு
நெஞ்சம் மாறிவிடு பிள்ளையை வாழவிடு
நெஞ்சம் மாறிவிடு பிள்ளையை வாழவிடு
நெஞ்சம் மாறிவிடு பிள்ளையை வாழவிடு

சங்கமமர்ந்தொரு முத்தமிழ் பாடிய சங்கரன் மீதினில் ஆணை
சங்கப் புலவர் நாவிலடங்கிய செந்தமிழ் மீதினில் ஆணை
மங்கல குங்குமம் மஞ்சள் நிறைந்த சங்கரி மீதினில் ஆணை
மாதொரு பாகன் சூடிய நாகப் பாம்பே உன்மேல் ஆணை
தேவன் மீதில் ஆணை அவன் திருவடி மீதும்
திருமறை மீதில் ஆணை என் திருநாவின் மேல் ஆணை

பண் மேலாணை சொல்மேலாணை என்மேலாணை உன் மேலாணை

நாதர் முடி மேலிருக்கும் நல்ல பாம்பே






Designed and maintained by AKR Consultants