ஆதி சிவன் தாள் பணிந்து

பாடியவர்: பி.சுசீலா, டி.எம். சௌந்தரராஜன்

இயற்றியவர்:

இசை: கே.வி. மஹாதேவன்

திரைப்படம்: திருவருட் செல்வர்

ஆதி சிவன் தாள் பணிந்து அருள் பெருவோமே - எங்கள்
ஆதி சக்தி நாயகியின் துணை பெருவோமே
ஆதி சிவன் தாள் பணிந்து அருள் பெருவோமே - எங்கள்
ஆதி சக்தி நாயகியின் துணை பெருவோமே
ஆதி சிவன் தாள் பணிந்து அருள் பெருவோமே

வேதங்களின் தத்துவத்தை நாடிடுவோமே - திரு
வெண்ணீரும் குங்குமமும் சூடிடுவோமே
வேதங்களின் தத்துவத்தை நாடிடுவோமே - திரு
வெண்ணீரும் குங்குமமும் சூடிடுவோமே
அஞ்செழுத்தைக் காலமெல்லாம் நெஞ்சில் வைப்போமே அவன்
அடியவர்க்கும் அன்பருக்கும் தொண்டு செய்வோமே

நாவுக்கரசர் பாடிப் புகழும் நாதனல்லவா அந்த
நாததுக்கே பெருமை தந்த ஜீவனல்லவா
நாவுக்கரசர் பாடிப் புகழும் நாதனல்லவா அந்த
நாததுக்கே பெருமை தந்த ஜீவனல்லவா
பேசும் தமிழ்ப் பாட்டுக்கெல்லாம் தந்தை யல்லவா
பேசும் தமிழ்ப் பாட்டுக்கெல்லாம் தந்தையல்லவா - அதைப்
பிள்ளைத் தமிழ் என்று சொன்ன அன்னையல்லவா - அதைப்
பிள்ளைத் தமிழ் என்று சொன்ன அன்னையல்லவா

ஆதி சிவன் தாள் பணிந்து அருள் பெருவோமே - எங்கள்
ஆதி சக்தி நாயகியின் துணை பெருவோமே
ஆதி சிவன் தாள் பணிந்து அருள் பெருவோமே - எங்கள்
ஆதி சக்தி நாயகியின் துணை பெருவோமே
ஆதி சிவன் தாள் பணிந்து அருள் பெருவோமே

ஆதி சிவன் தாள் பணிந்து

Designed and maintained by AKR Consultants