காற்று வந்தால் தலை சாயும்
பாடியவர்:பி.பி. ஸ்ரீனிவாஸ், பி. சுசீலா
இயற்றியவர்:
இசை:
திரைப்படம்: காத்திருந்த கண்கள்
காற்று வந்தால் தலை சாயும் நாணல்
காதல் வந்தால் தலை சாயும் நாணம்
ஆற்றினிலே கரைபுரளும் வெள்ளம்
ஆசையிலே கரைபுரளும் உள்ளம்
ஆடைதொட்டு விளையாடும் தென்றல்
ஆசை தொட்டு விளையாடும் கண்கள்
ஒருவர் மட்டும் படிப்பது தான் வேதம்
இருவராகப் படிக்கச் சொல்லும் காதல்
காற்று வந்தால் தலை சாயும் நாணல்
காதல் வந்தால் தலை சாயும் நாணம்
மழை வருமுன் வானை மூடும் மேகம் திரு
மணத்துக்கு முன் மனதை மூடும் மோகம்
ஓடி வரும் நாடி வரும் உறவு கொண்டு தேடி வரும்
உயிர் கலந்து சேர்ந்து விடும் மானும்
பாடி வரும் பருவமுகம் பக்கம் வந்து நின்றவுடன்
பாசத்தோடு சேர்ந்து கொள்வேன் நானும்
நானும் நானும்
காற்று வந்தால் தலை சாயும் நாணல்
காதல் வந்தால் தலை சாயும் நாணம்
அஞ்சி அஞ்சி நடந்து வரும் அன்னம்
அச்சத்திலே சிவந்து விடும் கன்னம்
கொஞ்சி வரும் வஞ்சி முகம் கோபுரத்துக் கலசமென
அந்தி வெயில் நேரத்திலே மின்னும்
மின்னி வரும் நேரத்திலே மேனி கொண்ட பருவத்ததிலே
முன்னிருந்தால் தோற்று விடும் பொன்னும்
உள்ளம் துள்ளும்.
காற்று வந்தால் தலை சாயும் நாணல்
காதல் வந்தால் தலை சாயும் நாணம்
|
