தாய் தந்த பிச்சையிலே
பாடியவர்: பி. சுசீலா
இயற்றியவர்:
இசை:
திரைப்படம்: சரஸ்வதி சபதம்
தாய் தந்த பிச்சையிலே பிறந்தேனம்மா இன்று
நீ தந்த பிச்சையிலே வளர்ந்தேனம்மா
ஏனிந்த வாழ்க்கை என்று அறியேனம்மா இது
இறைவனுக்கு ஓய்வு நேர விளையாட்டம்மா
தாய் தந்த பிச்சையிலே பிறந்தேனம்மா இன்று
நீ தந்த பிச்சையிலே வளர்ந்தேனம்மா
பெற்றவள் உடல் சலித்தால் பேதை நான் கால் சலித்தேன்
படைத்தவன் கை சலித்து ஓய்ந்தானம்மா - அம்மா அம்மம்மா..
பெற்றவள் உடல் சலித்தால் பேதை நான் கால் சலித்தேன்
படைத்தவன் கை சலித்து ஓய்ந்தானம்மா - மீண்டும்
பாவி ஒரு தாய் வயிற்றில் பிறவேனம்மா - மீண்டும்
பாவி ஒரு தாய் வயிற்றில் பிறவேனம்மா
தாய் தந்த பிச்சையிலே பிறந்தேனம்மா இன்று
நீ தந்த பிச்சையிலே வளர்ந்தேனம்மா
பபத்தும் பறந்திடும் பசி வந்தால் மறந்திடும்
இளமையில் கொடுமை இந்த வறுமை அம்மா - அம்மா அம்மம்மா
பபத்தும் பறந்திடும் பசி வந்தால் மறந்திடும்
இளமையில் கொடுமை இந்த வறுமை அம்மா - என்றும்
இது தான் நீதியென்றால் இறைவன் வேண்டுமா? - என்றும்
இது தான் நீதியென்றால் இறைவன் வேண்டுமா?
தாய் தந்த பிச்சையிலே பிறந்தேனம்மா இன்று
நீ தந்த பிச்சையிலே வளர்ந்தேனம்மா
|
