அன்பு மனம் கனிந்த பின்னே

பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன், பி. சுசீலா

இயற்றியவர்:

இசை:

திரைப்படம்: பாசமலர்

மலர்ந்தும் மலராத பாதி மலர் போல
வளரும் விழிவண்ணமே வந்து
விடிந்தும் விடியாத காலைப் பொழுதாக
விளைந்த கலை அன்னமே
நதியில் விளையாடி கொடியில் தலைசீவி
நடந்த இளம் தென்றலே - வளர்
பொதிகை மலை தோன்றி மதுரை நகர் கண்டு
பொலிந்த தமிழ் மன்றமே

மலர்ந்தும் மலராத பாதி மலர் போல
வளரும் விழிவண்ணமே வந்து
விடிந்தும் விடியாத காலைப் பொழுதாக
விளைந்த கலை அன்னமே
நதியில் விளையாடி கொடியில் தலைசீவி
நடந்த இளம் தென்றலே - வளர்
பொதிகை மலை தோன்றி மதுரை நகர் கண்டு
பொலிந்த தமிழ் மன்றமே

யானைப் படை கொண்டு சேனை பல வென்று
ஆளப் பிறந்தாயடா - அத்தை
மகளை மணம் கொண்டு இளமை வழிகண்டு
வாழப் பிறந்தாயடா வாழப் பிறந்தாயடா - அத்தை
மகளை மணம் கொண்டு இளமை வழிகண்டு
வாழப் பிறந்தாயடா வாழப் பிறந்தாயடா

தங்கக் கடியாரம் வைர மணியாரம்
தந்து மணம் பேசுவார் - பொருள்
தந்து மணம் பேசுவார் - மாமன்
தங்கை மகளான மங்கை உனக்காக
உலகை விலை பேசுவார்
உலகை விலை பேசுவார் - மாமன்
தங்கை மகளான மங்கை உனக்காக - மாமன்
தங்கை மகளான மங்கை உனக்காக
உலகை விலை பேசுவார்

நதியில் விளையாடி கொடியில் தலைசீவி
நடந்த இளம் தென்றலே - வளர்
பொதிகை மலை தோன்றி மதுரை நகர் கண்டு
பொலிந்த தமிழ் மன்றமே

சிறகில் எனை மூடி அருமை மகள் போல
வளர்த்த கதை சொல்லவா
கனவில் நினையாத காலம் இடை வந்து
பிரித்த கதை சொல்லவா
கண்ணில் மணிபோல மணியின் நிழல் போல
கலந்து பிறந்தோமடா - இந்த
மண்ணும் கடல் வானும்
மறைந்து முடிந்தாலும் மறக்க முடியாதடா - உறவை
பிரிக்க முடியாதடா ம்.. ம்.. அன்பே
ஆரிராராரோ ஆரிராராரோ ஆரிராராரிரோ

Get this widget | Track details | eSnips Social DNA






Designed and maintained by AKR Consultants