தாழையாம் பூ முடிச்சு
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன், பி. லீலா
இயற்றியவர்:
இசை:
திரைப்படம்: பாகப் பிரிவினை
தன்னதான தானதன்னா தந்தனன்ன தானானா
தந்தானனே தானே தந்தினன்னா ஓ.. ஓ.. தந்தானெனோ
தாழையாம் பூ முடிச்சு தடம் பாத்து நடை நடந்து
வாழை இலை போல வந்த பொன்னம்மா பொன்னம்மா என்
வாசலலுக்கு வாப்ங்கி வந்தது என்னம்மா - என்னம்மா
தாழையாம் பூ முடிச்சு தடம் பாத்து நடை நடந்து
வாழை இலை போல வந்த பொன்னம்மா - என்
வாசலலுக்கு வாப்ங்கி வந்தது என்னம்மா
பாளை போல் குணமிருக்கு பக்குவமா குணமிருக்கு - குணமிருக்கு
ஆளழகும் சேர்ந்திருக்கு கன்னையா - கன்னையா - இந்த
ஏழைகளுக்கென்ன வேணும் சொல்லையா
பாளை போல் குணமிருக்கு பக்குவமா குணமிருக்கு
ஆளழகும் சேர்ந்திருக்கு கன்னையா இந்த
ஏழைகளுக்கென்ன வேணும் சொல்லையா
தந்தான தந்தனத் தன்னே ததனன்ன தானானா தானானே
தாயாரின் சீதனமும் ஓ... தம்பிமார் பெரும் பொருளும் ஓ..
தாயாரின் சீதனமும் தம்பிமார் பெரும் பொருளும்
மாமியார் வீடு வந்தால் போதுமா - அது
மானாபி மானங்களைக் காக்குமா
மானாபி மானங்களைக் காக்குமா
தாழையாம் பூ முடிச்சு தடம் பாத்து நடை நடந்து
வாழை இலை போல வந்த பொன்னம்மா - என்
வாசலலுக்கு வாப்ங்கி வந்தது என்னம்மா
தானதான தானதன்னா தானேனனோ
மானமே ஆடைகளாம் மரியாதை பொன்நகையாம்
மானமே ஆடைகளாம் மரியாதை பொன்நகையாம்
நாணமாம் துணை இருந்தால் போதுமே எங்கள்
நாட்டு மக்கள் குலப் பெருமை தோன்றுமே
நாட்டு மக்கள் குலப் பெருமை தோன்றுமே
பாளை போல் சிரிப்பிருக்கு பக்குவமா குணமிருக்கு
ஆளழகும் சேர்ந்திருக்கு கன்னையா இந்த
ஏழைகளுக்கென்ன வேண்டும் சொல்லையா
அங்கம் குறைந்தவனை அங்கம் குறைந்தவனை
அங்கம் குறைந்தவனை அழகில்லா ஆண்மகனை
மங்கையர்கள் நினைப்பதுண்டோ சொல்லம்மா வீட்டில்
மணம் பேசி முடிப்பதுண்டோ சொல்லம்மா
மண் பார்த்து விளைவதில்லை மரம் பார்த்து படர்வதில்லை
மண் பார்த்து விளைவதில்லை மரம் பார்த்து படர்வதில்லை
கன்னியரும் பூங்கொடியும் கன்னையா அவர்
கண்ணிலே களங்கமுண்டோ சொல்லையா
கண்ணிலே களங்கமுண்டோ சொல்லையா
பாளை போல் சிரிப்பிருக்கு பக்குவமா குணமிருக்கு
ஆளழகும் சேர்ந்திருக்கு கன்னையா இந்த
ஏழைகளுக்கென்ன வேண்டும் சொல்லையா
தாழையாம் பூ முடிச்சு தடம் பாத்து நடை நடந்து
வாழை இலை போல வந்த பொன்னம்மா - என்
வாசலலுக்கு வாப்ங்கி வந்தது என்னம்மா
தந்தனன்னனே தானேனன்னே..
|
