மாநிலமேல் சில மானிடரால்
பாடியவர்: திருச்சி லோகநாதன்,
இயற்றியவர்:
இசை:
திரைப்படம்:
மாநிலமேல் சில மானிடரால் என்ன
மாறுதல் பாரையா மனிதன் மாறியதேனையா?
மாறுதல் பாரையா மனிதன் மாறியதேனையா?
வானத்து நிலவில் ஆதவன் திசையில்
மாறுதல் ஏதையா? மனிதன் மாறியதேனையா?
மனிதன் மாறியதேனையா?
மண்ணில் பலவித பிரிவினையாலே
மனிதன் மிருகமாய் மாறுவதாலே
என்னே கொடுமை எங்குமிந்நாளே
ஈனர்கள் தாண்டவம் பேய்களைப் போலே
அன்பையும் பண்பையும் தன்னலத்தால் பலி
ஆக்கிடும் பேதையாய் மனிதன் மாறியதையா?
மாநிலமேல் சில மானிடரால் என்ன
மாறுதல் பாரையா மனிதன் மாறியதேனையா?
மனிதன் மாறியதேனையா?
ஈஸ்வரன் அல்லா தாசர்கள் இன்றோ
பூசனை செய்தல் நாசத்தை அன்றோ?
தேசம் சுடுகாடாவது நன்றோ?
தெய்வத்தின் பெயரால் கொல்வதும் உண்டோ?
நேசம் அழிந்து ஆசை மிகுந்து
மோசடி புரிபவனாய் மனிதன் மாறியதேனையா?
மனிதன் மாறியதேனையா?
மாநிலமேல் சில மானிடரால் என்ன
மாறுதல் பாரையா மனிதன் மாறியதேனையா?
அன்பே ஆண்டவன் என்று நினைந்தால்
அனைவரும் ஓர்குலமாகவே வாழ்ந்தால்
தணலாய் வெந்தே வீடுகள் விழுமா?
தாயின் பிரிவால் சேய்கள் அழுமா?
சாந்தி சாந்தி எனும் காந்தியின் குரலும்
ஓய்ந்திடச் செய்பவனாய் மனிதன் மாறியதேனையா?
மாநிலமேல் சில மானிடரால் என்ன
மாறுதல் பாரையா மனிதன் மாறியதேனையா?
|
