பறந்து வந்த பைங்கிளியே

பாடியவர்: திருச்சி லோகநாதன்,

இயற்றியவர்:

இசை:

திரைப்படம்:

பறந்து வந்த பைங்கிளியே கண்ணம்மா ஒன்ன
மறந்து நானும் தூங்குவது என்னம்மா?
விருந்து என்று நடக்குமென்னு காத்திருந்தேன் நிச்சயமா
விருந்து என்று நடக்குமென்னு காத்திருந்தேன் நிச்சயமா - காதல்
தெரிஞ்சிருந்த மன்மதன் கூட மனசு வச்சான் கச்சிதமா
பறந்து வந்த பைங்கிளியே கண்ணம்மா

புள்ளையத் தூக்கும் வயசில நீ புத்தகம் தூக்கி வந்ததும்
புன்னகையால் கதையும் பேசி உன் மனதைத் தந்ததும்
புள்ளையத் தூக்கும் வயசில நீ புத்தகம் தூக்கி வந்ததும்
புன்னகையால் கதையும் பேசி உன் மனதைத் தந்ததும்
உள்ளம் ஒண்ணு உருவம் ரெண்டா
ஒளிஞ்சு ஒளிஞ்சு திரிஞ்சதும்
உள்ளம் ஒண்ணு உருவம் ரெண்டா
ஒளிஞ்சு ஒளிஞ்சு திரிஞ்சதும்

உனக்கும் எனக்கும் தெரிஞ்சிட்டாலும் - இந்த
உலகம் தெரிய வேணுமின்னு
ராம் பட்ட பரம்பர நான் லாலாபுரம் வடகர
பறந்து வந்த
பறந்து வந்த பைங்கிளியே கண்ணம்மா

காவேரியில் போட்ட தூண்டி கங்கா நதியில் மிதக்குமா?
கலா மீனு கவுர முள்ள கண்ட மீனு தவிடுமா
காவேரியில் போட்ட தூண்டி கங்கா நதியில் மிதக்குமா?
கலா மீனு கவுர முள்ள கண்ட மீனு தவிடுமா
சாவேரியின் ஆரோகணம் நீலாம்பரிக்குத் தெரியுமா?
சாவேரியின் ஆரோகணம் நீலாம்பரிக்குத் தெரியுமா?
சங்கதி யாவும் தெரிஞ்சதாலே - இந்த
கதையின் மனசு புரிஞ்சதாலே
ராம் பட்ட பரம்பர நான் லாலாபுரம் வடகர
பறந்து வந்த
பறந்து வந்த பைங்கிளியே கண்ணம்மா

அவுங்க ப்ளான் எவங்க ப்ளன் எவங்க ப்ளானும் செல்லாது
ஆகாயத்தில் பறந்து போன ஏரோப்ளானும் நில்லாது
அம்மா போடும் அணுகுண்டுதான் யாரையுமே வெல்லாது
அம்மா போடும் அணுகுண்டுதான் யாரையுமே வெல்லாது
அடக்குமுறை கூண்டுக்குள்ளே ஒன்னை அடக்கி வச்சேன்
அதிசயமா பறந்து வந்த
பறந்து வந்த பைங்கிளியே கண்ணம்மா ஒன்ன
மறந்து நானும் தூங்குவது என்னம்மா?
பறந்து வந்த பைங்கிளியே கண்ணம்மா

Get this widget | Track details | eSnips Social DNA






Designed and maintained by AKR Consultants