பொன்னான வாழ்வே மண்ணாகிப் போமா
பாடியவர்: திருச்சி லோகநாதன், எம்.எஸ். ராஜேஸ்வரி
இயற்றியவர்:
இசை:
திரைப்படம்:
பொன்னான வாழ்வே மண்ணாகிப் போமா
துயரம் நிலைதானா உலகம் இதுதானா?
பொன்னான வாழ்வே மண்ணாகிப் போமா
துயரம் நிலைதானா உலகம் இதுதானா?
பண்போடு முன்னாளில் அன்பாக
என்னோடு வாழ்ந்தாரே
பண்போடு முன்னாளில் அன்பாக
என்னோடு வாழ்ந்தாரே
வீணான பாலாய் விரும்பாத பூவாய்
என்றெண்ணி விடுத்தாரே
வீணான பாலாய் விரும்பாத பூவாய்
என்றெண்ணி விடுத்தாரே
என்னன்பை மறந்தாரே
பொன்னான வாழ்வே மண்ணாகிப் போமா
துயரம் நிலைதானா உலகம் இதுதானா?
பண்பாடு இல்லாமல் மண்மீது பாழாகி நொந்தேனே
பண்பாடு இல்லாமல் மண்மீது பாழாகி நொந்தேனே
தேனான வாழ்வு திசைமாறிப் போச்சு
நிம்மதி இழந்தாச்சு
தேனான வாழ்வு திசைமாறிப் போச்சு
நிம்மதி இழந்தாச்சு தீராத பழியாச்சு
பொன்னான வாழ்வே மண்ணாகிப் போமா
துயரம் நிலைதானா உலகம் இதுதானா?
பெண்ணென்றும் பாராமல் எல்லோரும்
என் மீது பழி சொல்வார்
பெண்ணென்றும் பாராமல் எல்லோரும்
என் மீது பழி சொல்வார்
உள்ளன்பு கொண்டேன் அவர்மீது நானே
ஊராரும் அறிவாரோ? என் வாழ்வை அழிப்பாரோ?
பொன்னான வாழ்வே மண்ணாகிப் போமா
துயரம் நிலைதானா உலகம் இதுதானா?
பொன்னான வாழ்வே மண்ணாகிப் போமா
துயரம் நிலைதானா உலகம் இதுதானா?
|
