சாட்டையில்லா பம்பரம் போல்

பாடியவர்: திருச்சி லோகநாதன்

இயற்றியவர்:

இசை:

திரைப்படம்:

ஓ.. ஓ.. ஓ.. ஓ...
சாட்டையில்லா பம்பரம் போல் ஆட்டுவிக்கும் ஆண்டவனே

தாரணியில் ஏழைகளை வாழவைப்பான் ஈஸ்வரனே

அன்பு வடிவானவனே அறம் வளர்த்த இறையவனே
அன்பு வடிவானவனே அறம் வளர்த்த இறையவனே
துன்பம் என்னும் கடலினிலே தோணி என்னும் துணையவனே

கண்டவர்கள் சொன்னதில்லை சொன்னவர்கள் கண்டதில்லை

விண்டுரைக்க எவருமில்லை விந்தையிலும் விந்தையடா

சாவதிலே வீரமில்லை தருமமில்லை இன்பமில்லை
தஞ்சமவன் பாதமடா சஞ்சலங்கள் தீருமடா தஞ்சமவன் பாதமடா

Get this widget | Track details | eSnips Social DNA

Designed and maintained by AKR Consultants