திருவெண்காடா

பாடியவர்: திருச்சி லோகநாதன்

இயற்றியவர்:

இசை:

திரைப்படம்:

திருவெண்காடா தீயவன் செய்த
பிழைகளைப் பொறுப்பாயா? - ஐயா திருவெண்காடா

அடித்த கையினால் ஒரு பிடி அன்னம்
எடுக்கவும் முடியல்லடா முடியல்லடா
துடுக்குடன் உன்னைப் பேசிய வாயோ
துடைகட்டிப் போனதடா ஐயா திருவெண்காடா

ஏழைகள் வயிறு எரிய வாங்கின
வட்டியை நினைப்பேனா - அதை
வேசிகள் காலில் கொட்டியே வாங்கிய
வேதனை சகிப்பேனா - ஐயா திருவெண்காடா

ஊசியைக் கொண்டே உலகம் தெரிந்தாய் நீ
உண்மையில் ஞானியடா - நீ ஞானியடா
உன்கால் தூசியே படும்படி உதைத்தென் பாபத்தை
உடைத்திட வேணுமடா - ஐயா

திருவெண்காடா தீயவன் செய்த
பிழைகளைப் பொறுப்பாயா? - ஐயா திருவெண்காடா

Get this widget | Track details | eSnips Social DNA






Designed and maintained by AKR Consultants