உலவும் தென்றல் காற்றினிலே

பாடியவர்: திருச்சி லோகநாதன்

இயற்றியவர்:

இசை:

திரைப்படம்: மந்திரி குமாரி

உலவும் தென்றல் காற்றினிலே
ஓடமிதே நாம் மகிழ ஊஞ்சலாடுதே
உலவும் தென்றல் காற்றினிலே
ஓடமிதே நாம் மகிழ ஊஞ்சலாடுதே
அலைகள் வந்து மோதியே
ஆடி உன்தன் பாட்டுக்கென்றே தாளம் போடுதே
அலைகள் வந்து மோதியே
ஆடி உன்தன் பாட்டுக்கென்றே தாளம் போடுதே

உயர்ந்த மலையும் உமது அன்பின்
உயர்வைக் காட்டுதே
உயர்ந்த மலையும் உமது அன்பின்
உயர்வைக் காட்டுதே
இதயம் அந்த மலைக்கு ஏது
அன்பைக் காட்டவே?
இதயம் அந்த மலைக்கு ஏது
அன்பைக் காட்டவே?

தெளிந்த நீரைப் போல தூய காதல் கொண்டோம் நாம்
களங்கம் அதிலும் காணுவாய்
களங்கம் அதிலும் காணுவாய் கவனம் வைத்தே பார்
குதர்க்கம் பேசி என்னை மயக்க எங்கு கற்றீரோ?
குதர்க்கம் பேசி என்னை மயக்க எங்கு கற்றீரோ?
உனது கடைக்கண் பார்வை காட்டும் பாடம் தன்னிலே
உனது கடைக்கண் பார்வை காட்டும் பாடம் தன்னிலே

உலக வாழ்க்கை ஆற்றினிலே
காதலெனும் தோணிதனில் ஊர்ந்து செல்லுவோம்
உலக வாழ்க்கை ஆற்றினிலே
காதலெனும் தோணிதனில் ஊர்ந்து செல்லுவோம்

Get this widget | Track details | eSnips Social DNA






Designed and maintained by AKR Consultants