வாழ்க்கையின் பாடம்
பாடியவர்: திருச்சி லோகநாதன்
இயற்றியவர்:
இசை:
திரைப்படம்:
வாழ்க்கையின் பாடம் கூறிடும் ஓடம்
ஓடும் சிங்காரம் கார்மாலை நேரம்
வாழ்க்கையின் பாடம் கூறிடும் ஓடம்
ஓடும் சிங்காரம் கார்மாலை நேரம்
மாமலை வானை தேன்முத்தம் ஈந்து
மாசிலாக் காதல் பேசுதே சேர்ந்து
மாமலை தேடும் வான் வெகுதூரம்
நாமதைக் காண ஏது ஆதாரம்?
வாழ்க்கையின் பாடம் கூறிடும் ஓடம்
ஓடும் சிங்காரம் கார்மாலை நேரம்
பூங்கொடி நீரை தழுவிடும் காட்சி
புதுமையைப் பார் இது காதல் அத்தாட்சி
இலைக் கனத்தாலே நீரலை மேலே
வளையும் தன்னாலே பாரும் கண்ணாலே
வாழ்க்கையின் பாடம் கூறிடும் ஓடம்
ஓடும் சிங்காரம் கார்மாலை நேரம்
காதலின் தாபம் தணித்திட வேண்டி
கரைதனைத் தாவி வரும் அலை பாராய்
தென்திசைக் காற்றின் வேகத்தினாலே
திரைநதி மோதும் அது கரைமீதே
வாழ்க்கையின் பாடம் கூறிடும் ஓடம்
ஓடும் சிங்காரம் கார்மாலை நேரம்
பொன்வண்டு பூவை தாவியே ஓடி
புதுக்காதல் கீதம் பாடுதே நாடி
தேனுண்ண வண்டு தான் பசி கொண்டு
பூமலர் கண்டு கத்துது மண்டு
வாழ்க்கையின் பாடம் கூறிடும் ஓடம்
ஓடும் சிங்காரம் கார்மாலை நேரம்
|
