வான மீதில் நீந்தி ஓடும்
பாடியவர்: திருச்சி லோகநாதன்
இயற்றியவர்:
இசை:
திரைப்படம்: கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி
வான மீதில் நீந்தி ஓடும் வெண்ணிலாவே - நீ தான்
வந்ததேனோ ஜன்னலுக்குள் வெண்ணிலாவே?
வான மீதில் நீந்தி ஓடும் வெண்ணிலாவே - நீ தான்
வந்ததேனோ ஜன்னலுக்குள் வெண்ணிலாவே
நானும் உன்னைப் பார்த்துவிட்டால் வெண்ணிலாவே
நானும் உன்னைப் பார்த்துவிட்டால் வெண்ணிலாவே - முகம்
நாணியே மறைவதேனோ வெண்ணிலாவே?
நாணியே மறைவதேனோ வெண்ணிலாவே?
பட்டப் பகலில் ஜோதி வீசும் வெண்ணிலாவே உன்னைப்
பார்ப்பதும் ஓர் விந்தையன்றோ வெண்ணிலாவே
பட்டப் பகலில் ஜோதி வீசும் வெண்ணிலாவே உன்னைப்
பார்ப்பதும் ஓர் விந்தையன்றோ வெண்ணிலாவே
வட்டமான உன் முகத்தில் வெண்ணிலாவே
வட்டமான உன் முகத்தில் வெண்ணிலாவே - ரெண்டு
வண்டுகள் சுழல்வதேனோ வெண்ணிலாவே?
வண்டுகள் சுழல்வதேனோ வெண்ணிலாவே?
வான மீதில் நீந்தி ஓடும் வெண்ணிலாவே
|
