வஞ்சமிதோ வாஞ்சையிதோ?
பாடியவர்: திருச்சி லோகநாதன்
இயற்றியவர்:
இசை:
திரைப்படம்: மந்திரி குமாரி
வஞ்சமிதோ வாஞ்சையிதோ?
வந்தவர் நெஞ்சினில் எண்ணமும் ஏதோ?
வஞ்சமிதோ வாஞ்சையிதோ
நள்ளிரவில் கள்ளனைப் போல்
மெள்ள நுழைந்ததும் ஏனோ?
நள்ளிரவில் ஒரு கள்ளனைப் போல்
மெள்ள நுழைந்ததும் ஏனோ? - நான்
அள்ளிக் கொடுத்ததைத் தள்ளிவிட்டே கண்ணில்
ஆவலைக் காட்டியதேனோ? கண்ணில்
ஆவலைக் காட்டியதேனோ?
வஞ்சமிதோ வாஞ்சையிதோ
வஞ்சமிதோ வாஞ்சையிதோ?
மங்கையின் நெஞ்சினில் எண்ணமும் ஏதோ?
வஞ்சமிதோ வாஞ்சையிதோ?
தீங்குயிலாள் ஒரு வேங்கையைப் போல்
சீறி விழுந்ததும் ஏனோ
தீங்குயிலாள் ஒரு வேங்கையைப் போல்
சீறி விழுந்ததும் ஏனோ - எனைத்
தேடியவள் தந்தை ஓடி வர கண்டு
மூடி மறைத்ததும் ஏனோ? - என்னை
மூடி மறைத்ததும் ஏனோ?
விழியின் அன்பும் மொழியில் அனலும்
வீசுதல் காதல் நீதியோ?
விழியின் அன்பும் மொழியில் அனலும்
வீசுதல் காதல் நீதியோ?
ஒளிந்தே வந்து நெஞ்சில் புகுந்து
ஓடுதல் ஆண்கள் நீதியோ?
ஒளிந்தே வந்து நெஞ்சில் புகுந்து
ஓடுதல் ஆண்கள் நீதியோ?
வஞ்சமிதோ வாஞ்சையிதோ?
வந்தவர் நெஞ்சினில் எண்ணமும் ஏதோ?
வஞ்சமிதோ வாஞ்சையிதோ?
|
