வாராய் நீ வாராய்
பாடியவர்: திருச்சி லோகநாதன், சீர்காழி கோவிந்தராஜன்
இயற்றியவர்:
இசை:
திரைப்படம்: மந்திரி குமாரி
வாராய் நீ வாராய் வாராய் நீ வாராய்
போகுமிடம் வெகு தூரமில்லை நீ வாராய்
போகுமிடம் வெகு தூரமில்லை நீ வாராய்
ஆஹா மாருதம் வீசுவதாலே
ஆனந்தம் பொங்குதே மனதிலே
ஆஹா மாருதம் வீசுவதாலே
ஆனந்தம் பொங்குதே மனதிலே
இதனிலும் ஆனந்தம் அடைந்தே இயற்கையில்
கலந்துயர் விண்ணினைக் காண்பாய்
இதனிலும் ஆனந்தம் அடைந்தே இயற்கையில்
கலந்துயர் விண்ணினைக் காண்பாய் - அங்கே வாராய்
அமைதி நிலவுதே சாந்தம் தவழுதே ஓ..
அமைதி நிலவுதே சாந்தம் தவழுதே
அழிவிலா மோன நிலை சூழுதே
முடிவிலா மோன நிலையினை நீ
மலைமுடியில் காணுவாய் வாராய் வாராய்
ஈடில்லா அழகை சிகர மீதிலே
கண்டு இன்பமே கொள்வோம்
ஈடில்லா அழகின் சிகர மீதிலே
கண்டு இன்பமே கொள்வோம்
இன்பமும் அடைந்தே இகமறந்தேறே
உலகம் காண்பாய் அங்கே
இன்பமும் அடைந்தே இகமறந்தேறே
உலகம் காண்பாய் அங்கே
வாராய் நீ வாராய்
புலி எனைத் தொடர்ந்தே புதுமான் நீயே
வாராய் வாராய்
|
