மண்மீது மானம் ஒன்றே ப்ரதானம்
பாடியவர்: திருச்சி லோகநாதன்
இயற்றியவர்:
இசை:
திரைப்படம்:
மதியாதார் வாசல் தித்தொருக் கால் சென்றே
மிதியாமை கோடிபெறும் - என்ற
மதி சொன்ன ஔவை மொழிதன்னைப் போற்றி
வாழ்வதே பெறுமை தரும் ஆ...ஆ....ஆ...ஆ...
மண்மீது மானம் ஒன்றே ப்ரதானம்
என்றெண்ணும் குணம் வேணும் - இதை
மறந்தாலே வாழ்வில் கிடைக்கும் சன்மானம்
மாறாத அவமானம்
மண்மீது மானம் ஒன்றே ப்ரதானம்
என்றெண்ணும் குணம் வேணும் - இதை
மறந்தாலே வாழ்வில் கிடைக்கும் சன்மானம்
மாறாத அவமானம்
கண்ணான கணவன் தன்மானம் தன்னை
காப்பாற்றும் பெண் தெய்வம்
கண்ணான கணவன் தன்மானம் தன்னை
காப்பாற்றும் பெண் தெய்வம் - மனம்
புண்ணாகிச்சிந்து கண்ணீரைக் காண
பொறுக்காதடா தெய்வம்
எண்ணாத துன்பம் எதுவந்த போதும்
எதிர்கொள்ளத் தயங்காதே
எளியோருக்காக நீ செய்த தியாகம்
இதை லோகம் மறவாதே
எண்ணாத துன்பம் எதுவந்த போதும்
எதிர்கொள்ளத் தயங்காதே
எளியோருக்காக நீ செய்த தியாகம்
இதை லோகம் மறவாதே
அழியாத இன்பம் புவியோர்கள் எண்ணும்
பணங்காசிலே இல்லை ஆ..ஆ..
அழியாத இன்பம் புவியோர்கள் எண்ணும்
பணங்காசிலே இல்லை - மெய்
அன்பே என்னாளும் அழியாத இன்பம்
அதற்கீடு வேறில்லை
மண்மீது மானம் ஒன்றே ப்ரதானம்
என்றெண்ணும் குணம் வேணும் - இதை
மறந்தாலே வாழ்வில் கிடைக்கும் சன்மானம்
மாறாத அவமானம்
|
