உண்மை ஒரு நாள் வெளியாகும்

பாடியவர்: திருச்சி லோகநாதன்

இயற்றியவர்:

இசை:

திரைப்படம்:

உண்மை ஒரு நாள் வெளியாகும்
உண்மை ஒரு நாள் வெளியாகும் - அதில்
உள்ளங்களெல்லாம் தெளிவாகும்
உண்மை ஒரு நாள் வெளியாகும் - அதில்
உள்ளங்களெல்லாம் தெளிவாகும்

பொறுமை ஒரு நாள் புலியாகும்
பொறுமை ஒரு நாள் புலியாகும் - அதற்குப்
பொய்யும் புரட்டும் பலியாகும்
பொய்யும் புரட்டும் பலியாகும்

உண்மை ஒரு நாள் வெளியாகும் - அதில்
உள்ளங்களெல்லாம் தெளிவாகும்
உண்மை ஒரு நாள் வெளியாகும்

தாழம்பூவை தலையில் மறைத்தாலும்
வாசம் மறைவது கிடையாது
தாழம்பூவை தலையில் மறைத்தாலும்
வாசம் மறைவது கிடையாது
சத்தியத்தையும் உலகில் எவனும்
சத்தியத்தையும் உலகில் எவனும்
சதியால் மறைக்க முடியாது

அன்பு நெஞ்சிலே ஆத்திரம் வந்தால்
ஆண்டவன் கூட அஞ்சிடுவான்
ஆண்டவன் கூட அஞ்சிடுவான்
அன்பு நெஞ்சிலே ஆத்திரம் வந்தால்
ஆண்டவன் கூட அஞ்சிடுவான்
ஆண்டவன் கூட அஞ்சிடுவான்

அறிவுக்கதவை சரியாய்த் திறந்தால்
பிறவிக் குருடனும் கண்பெறுவான்
பிறவிக் குருடனும் கண்பெறுவான்
உண்மை ஒரு நாள் வெளியாகும் - அதில்
உள்ளங்களெல்லாம் தெளிவாகும்
உண்மை ஒரு நாள் வெளியாகும்

Get this widget | Track details | eSnips Social DNA






Designed and maintained by AKR Consultants