சின்னக் குட்டி நாத்தனா

பாடியவர்: திருச்சி லோகநாதன்

இயற்றியவர்:

இசை:

திரைப்படம்:

சின்னக் குட்டி நாத்தனா சில்லரையே மாத்துனா

குன்னக்குடி போற வண்டியில் குடும்பம் பூரா ஏத்துனா

குளுரடிக்கிற கொளந்த மேலே துணியைப் போட்டுப் போத்துனா

குவாகுவான்னு கத்தினதால முதுகுல ரெண்டு சாத்துனா

கிலுகிலுப்பையக் கையில கொடுத்து அழுத புள்ளையைத் தேத்துனா
கிலுகிலுப்பையக் கையில கொடுத்து அழுத புள்ளையைத் தேத்துனா

சின்னக் குட்டி நாத்தனா சில்லரையே மாத்துனா
குன்னக்குடி போற வண்டியில் குடும்பம் பூரா ஏத்துனா
சின்னக் குட்டி நாத்தனா சில்லரையே மாத்துனா

பன்னப்பட்டி கிராமத்திலே பளைய சோறும் தின்னுக்கிட்டா
பன்னப்பட்டி கிராமத்திலே பழைய சோறும் தின்னுக்கிட்டா
பங்காளி ஊட்டு சிங்காரத்தோட பழைய கதையும் பேசிக்கிட்டா
கன்னுக்குட்டியே மல்லுக்கட்டியே கயத்தைப் போட்டுப் பிடிச்சுக்கிட்டா

மண்ணுக்கட்டியால் மாங்கா அடிச்சு வாயில போட்டு கடிச்சுகிட்டா

சின்னக் குட்டி நாத்தனா சில்லரையே மாத்துனா
குன்னக்குடி போற வண்டியில் குடும்பம் பூரா ஏத்துனா
சின்னக் குட்டி நாத்தனா சில்லரையே மாத்துனா

Get this widget | Track details | eSnips Social DNA

Designed and maintained by AKR Consultants