சின்ன அரும்பு மலரும்
பாடியவர்: திருச்சி லோகநாதன்
இயற்றியவர்:
இசை:
திரைப்படம்:
சின்ன அரும்பு மலரும் சிரிப்பை சிந்தி வளரும்
கண்கள் அந்தக் காட்சி கண்டு களிக்கும் நாள் வரும்
நான் களிக்கும் நாள் வரும்
சின்ன அரும்பு மலரும் சிரிப்பை சிந்தி வளரும்
மண்ணில் உலவும் நிலவே என் வயிற்றில் உதித்த கனியே
மண்ணில் உலவும் நிலவே என் வயிற்றில் உதித்த கனியே
வாழ்வு உன்னால் செழித்தே மனம் மகிழும் நாள் வரும்
நான் மகிழும் நாள் வரும்
நீ எங்கு இரந்த போதும் என் இதயம் உன்னை வாழ்த்தும்
நீ எங்கு இரந்த போதும் என் இதயம் உன்னை வாழ்த்தும்
தாய் அன்பு உன்னைக் காக்கும்
தாய் அன்பு உன்னைக் காக்கும் நீ அழுவதேனடா உறங்கி
அமைதி காணடா அழுவதேனடா அமைதி காணடா
|