சின்னக் குழந்தைகள் போல் விளையாடி

பாடியவர்: பி. சுசீலா

இயற்றியவர்: மஹாகவி பாரதியார்

இசை:

திரைப்படம்: கப்பலோட்டிய தமிழன்

சின்னக் குழந்தைகள் போல் விளையாடி
சிரித்துக் களித்திடுவான் அவன் சிரித்துக் களித்திடுவான் ஆ...
சின்னக் குழந்தைகள் போல் விளையாடி
சிரித்துக் களித்திடுவான் அவன் சிரித்துக் களித்திடுவான்

கோபத்திலே ஒரு சொல்லிற் சிரித்துக்
குலுங்கிடச் செய்திடுவான்
கோபத்திலே ஒரு சொல்லிற் சிரித்துக்
குலுங்கிடச் செய்திடுவான் மன
தாபத்திலே ஒன்று செய்து மகிழ்ச்சி
தளிர்த்திடச் செய்திடுவான் மன
தாபத்திலே ஒன்று செய்து மகிழ்ச்சி
தளிர்த்திடச் செய்திடுவான்

சின்னக் குழந்தைகள் போல் விளையாடி
சிரித்துக் களித்திடுவான் அவன் சிரித்துக் களித்திடுவான்

ஆபத்திலே வந்து பக்கத்திலே நின்று
அதனை விலக்கிடுவான்
ஆபத்திலே வந்து பக்கத்திலே நின்று
அதனை விலக்கிடுவான் - சுடர்
தீபத்திலே விழும் பூச்சிகள் போல் வரும்
தீமைகள் கொன்றிடுவான் - சுடர்
தீபத்திலே விழும் பூச்சிகள் போல் வரும்
தீமைகள் கொன்றிடுவான் ஆ...

சின்னக் குழந்தைகள் போல் விளையாடி
சிரித்துக் களித்திடுவான் அவன் சிரித்துக் களித்திடுவான்


Get Your Own Hindi Songs Player at Music Plugin






Designed and maintained by AKR Consultants