ஆனைமுகனே ஆதிமுதலானவனே

பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன், பி. லீலா

இயற்றியவர்: கண்ணதாசன்

இசை: எம்.எஸ். விஸ்வநாதன்

திரைப்படம்: பாகப்பிரிவினை

ஆனைமுகனே ஆதிமுதலானவனே
பானை வயிற்றோனே பக்தர்களைக் காப்பவனே
மோனைப்பொருளே மூத்தவனே கணேசா கணேசா
ஏனென்று கேளுமையா இந்த ஏழை முகம் பாருமையா ஆ...
ஓஹோய்..

பிள்ளையாரு கோவிலுக்குப் பொழுதிருக்க வந்திருக்கும்
புள்ளை யாரு இந்தப் புள்ளை யாரு?
புள்ளை யாரு இந்தப் பிள்ளை யாரு?

வள்ளியம்மை நேசத்திலே வனவேடன் வேஷத்திலே
வள்ளியம்மை நேசத்திலே வனவேடன் வேஷத்திலே
வாட்டங்கொண்ட வேலனுக்கு உதவி செஞ்சாரு யானை
உருவில் வந்தாரு - இந்த
வாட்டங்கொண்ட மாப்பிள்ளைக்கு என்னடி செய்வாரு?
பொண்ணுக்கு எங்கடி போவாரு?
பொண்ணுக்கு எங்கடி போவாரு?

பிள்ளையாரு கோவிலுக்குப் பொழுதிருக்க வந்திருக்கும்
புள்ளை யாரு இந்தப் புள்ளை யாரு?
புள்ளை யாரு இந்தப் பிள்ளை யாரு?

ஆஹா!
குலுக்கி மினுக்கிகிட்டு குடங்களையும் தூக்கிகிட்டு
தளுக்கு நடை போட்டுகிட்டு ஜாடையிலே பாத்துகிட்டு
கொளத்தங்கரை ஓரத்திலே அடங்கப்பா கணேசா!
மயக்கம் வரும் நேரத்திலே கூட்டமா வந்திருக்கும்
இவங்க நோட்டமென்ன சொல்லுமப்பா - இவங்க
நோட்டம் என்ன சொல்லுமப்பா
ஓஹோய்

தனக்கொருத்தி இல்லாம தனிச்சிருக்கும் சாமியிடம்
எனக்கொருத்தி வேணுமின்னு கேக்க வந்தாரோ
ஏங்கி ஏங்கி ஏங்கி என்னப் பாக்க வந்தாரோ

ஏய் போக்கிரி குட்டிகளா..
தண்ணி தூக்கப் போறதுபோல் கண்ணி போட வந்திருக்கும்
பொண்ணு யாரு? இவ புருஷன் யாரு?
கன்னி யாரு? அந்தக் கள்ளி யாரு?

வேப்பெண்ணெய்யைப் பூசிகிட்டு வெறுங்கையாலே கிண்டி விட்டு
வேடு கட்டும் கூந்தலிலே செங்கமலம் - காக்கா
கூடு கட்டப் பாக்குதடி ருக்குமணி
செங்கமலம் செங்கமலம் ருக்குமணி ருக்குமணி
தண்ணி தூக்கப் போறதுபோல் கண்ணி போட வந்திருக்கும்
பொண்ணு யாரு? இவ புருஷன் யாரு?
கன்னி யாரு? அந்தக் கள்ளி யாரு?

ஓஹோய்
கட்டழகைப் பாருங்கடி காலைப் புடிச்சு வாருங்கடி
கட்டழகைப் பாருங்கடி காலைப் புடிச்சு வாருங்கடி
டோய்
ஒய்யாரப் பெண்டுகளா ஒடம்பைத் தொளைக்கும் வண்டுகளா

நொண்டிக்கை நொண்டிக்கை ஊளமூக்கு ஊளமூக்கு
நொண்டிக்கை நொண்டிக்கை ஊளமூக்கு ஊளமூக்கு
கோணமூஞ்சி கோணமூஞ்சி கோணமூஞ்சி கோணமூஞ்சி
பூனை முழி பூனை முழி
முட்டிக் காலு சட்டித்தலை
கொட்டப் பல்லு பட்டி வாயி
முட்டிக் காலு சட்டித்தலை
கொட்டப் பல்லு பட்டி வாயி
நீதான் நீங்கதான் நீதான் நீங்கதான்
புடிங்கடி நில்லுங்கடி டிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

ஆனைமுகனே ஆதிமுதலானவனே






Designed and maintained by AKR Consultants