ஒற்றுமையாய் வாழ்வதாலே
பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன், எல்.ஆர். ஈஸ்வரி
இயற்றியவர்: மருதகாசி
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
திரைப்படம்: பாகப்பிரிவினை
மந்தரையின் போதனையால் மனம் மாறிக் கைகேயி
மஞ்சள் குங்குமம் இழந்தாள்
வஞ்சக சகுனியின் சேர்க்கையால் கௌரவர்கள்
பஞ்ச பாண்டவரைப் பகைத்து அழிந்தார்
சிந்தனையில் இதையெல்லாம்
சிறிதேனும் கொள்ளாமல் மனிதரெல்லாம்
மந்த மதியால் அறிவு மயங்கி
மனம் போனபடி நடக்கலாமோ?
ஒற்றுமையாய் வாழ்வதாலே உண்டு நன்மையே
வேற்றுமையை வளர்ப்பதனாலே விளையும் தீமையே
உணர்வோடு ஒன்றியே உருவாகும் பாசமே
அணையாத தீபமாய் சுடரென்றும் வீசுமே
நெஞ்சில் உண்டான அன்பையே துண்டாடி வம்பையே
உறவாகத் தந்திடும் சிலர் சொல்லை நம்பியே
வேற்றுமையை வளர்ப்பதனாலே விளையும் தீமையே
ஒற்றுமையாய் வாழ்வதாலே உண்டு நன்மையே
வேற்றுமையை வளர்ப்பதனாலே விளையும் தீமையே
துணையின்றி வெண்புறா தனியாக வந்ததே
வனவேடன் வீசிய வலைதன்னில் வீழ்ந்ததே
இனம் யாவும் சேர்ந்து தான் அதை மீட்டுச் சென்றதே
கதையான போதிலும் கருத்துள்ள பாடமே
வேற்றுமையை வளர்ப்பதனாலே விளையும் தீமையே
ஒற்றுமையாய் வாழ்வதாலே உண்டு நன்மையே
வேற்றுமையை வளர்ப்பதனாலே விளையும் தீமையே
