நெஞ்சம் மறப்பதில்லை

பாடியவர்: பி. சுசீலா

இயற்றியவர்: கண்ணதாசன்

இசை:

திரைப்படம்: நெஞ்சம் மறப்பதில்லை

ஆஆ...அ..ஆ..
நெஞ்சம் மறப்பதில்லை அது
நினைவை இழக்கவில்லை நான்
காத்திருந்தேன் உன்னைப் பார்த்திருந்தேன்
கண்களும் மூடவில்லை என்
கண்களும் மறப்பதில்லை
நெஞ்சம் மறப்பதில்லை

காலங்கள் தோறும் உன் மடி தேடி
கலங்கும் என் மனமே வரும்
காற்றினிலும் பெரும் கனவினிலும் நான்
காண்பது உன் முகமே
நெஞ்சம் மறப்பதில்லை அது
நினைவை இழக்கவில்லை நான்
காத்திருந்தேன் உன்னைப் பார்த்திருந்தேன்
கண்களும் மூடவில்லை என்
கண்களும் மறப்பதில்லை

தாமரை மலரில் மனதினை எடுத்து
தனியே வைத்திருந்தேன்
தாமரை மலரில் மனதினை எடுத்து
தனியே வைத்திருந்தேன்
ஒரு தூதுமில்லை உன் தோற்றமில்லை கண்ணின்
தூக்கம் பிடிக்கவில்லை - கண்ணின்
தூக்கம் பிடிக்கவில்லை

நெஞ்சம் மறப்பதில்லை அது
நினைவை இழக்கவில்லை நான்
காத்திருந்தேன் உன்னைப் பார்த்திருந்தேன்
கண்களும் மூடவில்லை என்
கண்களும் மூடவில்லை

நெஞ்சம் மறப்பதில்லை

நெஞ்சம் மறப்பதில்லை






Designed and maintained by AKR Consultants