நெஞ்சம் மறப்பதில்லை

பாடியவர்: பி.நி. ஸ்ரீனிவாஸ், பி. சுசீலா

இயற்றியவர்: கண்ணதாசன்

இசை:

திரைப்படம்: நெஞ்சம் மறப்பதில்லை

ஆ..ஆ..ஆ.ஆ..
நெஞ்சம் மறப்பதில்லை - அது
நினைவை இழக்கவில்லை - நான்
காத்திருந்தேன் உன்னைப் பார்த்திருந்தேன்
கண்களும் மூடவில்லை - என்
கண்களும் மூடவில்லை

நெஞ்சம் மறப்பதில்லை - அது
நினைவை இழக்கவில்லை - நான்
காத்திருந்தேன் உன்னைப் பார்த்திருந்தேன்
கண்களும் மூடவில்லை - என்
கண்களும் மூடவில்லை

நெஞ்சம் மறப்பதில்லை

ஒரு மட மாது உருகுகின்றாளே
உனக்கா புரியவில்லை - இது
சோதனையா நெஞ்சின் வேதனையா - உன்
துணையே கிடைக்கவில்லை - உன்
துணையே கிடைக்கவில்லை

நெஞ்சம் மறப்பதில்லை

ஒரு பொழுதேனும் உன்னுடனே - நான்
உயிராய் இணைந்திருப்பேன் - அதை
இறப்பினிலும் மறு பிறப்பினும் - நான்
என்றும் நினைத்திருப்பேன் - நான்
என்றும் நினைத்திருப்பேன்

நெஞ்சம் மறப்பதில்லை

நெஞ்சம் மறப்பதில்லை






Designed and maintained by AKR Consultants