மாறாதையா மாறாது

பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்

இயற்றியவர்: மருதகாசி

இசை:

திரைப்படம்: குடும்பத் தலைவன்

மாறாதையா மாறாது மனமும் குணமும் மாறாது
மாறாதையா மாறாது மனமும் குணமும் மாறாது
அஹஹஹ ஓஹோஓஹோ ம்ஹ்ம்ஹ்ம்ஹ்ம்ஹ்ம்ஹ்ம்
துறவியின் வாழ்வில் துயரம் வந்தாலும்
தூய தங்கம் தீயில் வெந்தாலும்
மாறாதையா மாறாது மனமும் குணமும் மாறாது
அஹஹஹ ஓஹோஓஹோ ம்ஹ்ம்ஹ்ம்ஹ்ம்ஹ்ம்ஹ்ம்

காட்டுப் புலியை வீட்டில் வச்சாலும்
கறியும் சோறும் கலந்து வச்சாலும்
குரங்கின் கையில் மாலையைக் கொடுத்து
கோபுரத்தின் மேல் நிக்க வச்சாலும் ஓஹோஹோஹோஹொஹோ
மாறாதையா மாறாது மனமும் குணமும் மாறாது
அஹஹஹ ஓஹோஓஹோ ம்ஹ்ம்ஹ்ம்ஹ்ம்ஹ்ம்ஹ்ம்

வரவறியாமல் செலவழிச்சாலும் நெலைக்காது
மனசறியாமல் காதலிச்சாலும் பலிக்காது
காலமில்லாமல் வெத வெதைச்சாலும் முளைக்காது
காத்துல வெளக்க ஏத்தி வச்சாலும் எரியாது

திட்டும் வாயைப் பூட்டி வச்சாலும்
திருடும் கையைக் கட்டி வச்சாலும்
தேடும் காதைத் திருகி வச்சாலும்
ஆடும் கண்களை அடக்கி வச்சாலும் ஓஹோஹோஹோஹொஹோ

மாறாதையா மாறாது மனமும் குணமும் மாறாது
மாறாதையா மாறாது மனமும் குணமும் மாறாது
அஹஹஹ ஓஹோஓஹோ ம்ஹ்ம்ஹ்ம்ஹ்ம்ஹ்ம்ஹ்ம்

மாறாதையா மாறாது






Designed and maintained by AKR Consultants