சித்திரம் பேசுதடி

பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்

இயற்றியவர்:

இசை:

திரைப்படம்: சபாஷ் மீனா

சித்திரம் பேசுதடி உன்
சித்திரம் பேசுதடி என்தன்
சிந்தை மயங்குதடி
சித்திரம் பேசுதடி

முத்துச் சரங்களைப் போல்
முத்துச் சரங்களைப் போல் மோகனப்
புன்னகை மின்னுதடி
முத்துச் சரங்களைப் போல் மோகனப்
புன்னகை மின்னுதடி

சித்திரம் பேசுதடி என்தன்
சிந்தை மயங்குதடி
சித்திரம் பேசுதடி

தாவும் பொடி மேலே ஒளிர்
தங்கக்குடம் போலே
தாவும் பொடி மேலே ஒளிர்
தங்கக்குடம் போலே
பாவையுன் பேரெழிலே என்தன்
ஆவலைத் தூண்டுதடி
பாவையுன் பேரெழிலே என்தன்
ஆவலைத் தூண்டுதடி

சித்திரம் பேசுதடி என்தன்
சிந்தை மயங்குதடி
சித்திரம் பேசுதடி

என் மனம் நீயறிவாய் உன்தன்
எண்ணமும் நானறிவேன்
இன்னமும் ஊமையைப் போல் மௌனம்
ஏனடி தேன் மொழியே
இன்னமும் ஊமையைப் போல் மௌனம்
ஏனடி தேன் மொழியே

சித்திரம் பேசுதடி என்தன்
சிந்தை மயங்குதடி
சித்திரம் பேசுதடி

சித்திரம் பேசுதடி






Designed and maintained by AKR Consultants