துள்ளாத மனமும் துள்ளும்

பாடியவர்: ஜிக்கி

இயற்றியவர்:

இசை:

திரைப்படம்: கல்யாணப் பரிசு

துள்ளாத மனமும் துள்ளும்
சொல்லாத கதைகள் சொல்லும்
இல்லாத ஆசையைக் கிள்ளும்
இன்பத்தேனையும் வெல்லும் - இசை
இன்பத் தேனையும் வெல்லும்

துள்ளாத மனமும் துள்ளும்
சொல்லாத கதைகள் சொல்லும்
இல்லாத ஆசையைக் கிள்ளும்
இன்பத்தேனையும் வெல்லும் - இசை
இன்பத் தேனையும் வெல்லும்

துன்பக் கடலைத் தாண்டும் போது
தோணியாவது கீதம்
துன்பக் கடலைத் தாண்டும் போது
தோணியாவது கீதம்
அன்புக் குரலில் அமுதம் கலந்தே
அருந்தத் தருவதும் கீதம்
எங்கும் சிதறும் எண்ணங்களையும்
இழுத்து வருவது கீதம்
இணைத்து மகிழ்வதும் துயர்
இருளை மறைப்பதும் கீதம்

துள்ளாத மனமும் துள்ளும்
சொல்லாத கதைகள் சொல்லும்
இல்லாத ஆசையைக் கிள்ளும்
இன்பத்தேனையும் வெல்லும் - இசை
இன்பத் தேனையும் வெல்லும்

சோர்ந்த பயிரும் நீரைக் கண்டால்
சோகை விரித்து வளர்ந்திடும்

சாய்ந்த கொடியும் கிளையைக் கண்டால்
தாவி அணைத்தே படர்ந்திடும்
மங்கை இதயம் நல்ல துணைவன்
வரவு கண்டே மகிழ்ந்திடும்
உறவு கொண்டால் இணணைந்திடும் அதில்
உண்மை இன்பம் விளைந்திடும்

துள்ளாத மனமும் துள்ளும்
சொல்லாத கதைகள் சொல்லும்
இல்லாத ஆசையைக் கிள்ளும்
இன்பத்தேனையும் வெல்லும் - காதல்
இன்பத் தேனையும் வெல்லும்

துள்ளாத மனமும் துள்ளும்






Designed and maintained by AKR Consultants