சிரிப்பு பாதி அழுகை பாதி
பாடியவர்: பி.பி. ஸ்ரீனிவாஸ்
இயற்றியவர்:
இசை:
திரைப்படம்: எங்க வீட்டுப் பெண்
நெருப்பு பாதி நீரும் பாதிநிறைந்ததல்லவோ உலக நீதி
சிரிப்பு பாதி அழுகை பாதி
சேர்ந்ததல்லவோ மனித ஜாதி
பசித்த வயிற்றில் உணவு தெய்வம்
பாலைவனத்தில் தண்ணீர் தெய்வம்
கொட்டும் மழையில் கூரை தெய்வம்
கோடை வெயிலின் நிழலே தெய்வம்
உடைத்த கல்லில் ஒன்று தெய்வம்
ஒன்று கோவில் ஒன்று வாசல்
இறைவன் படைப்பில் பேதம் இல்லை
இடத்தைப் பொறுத்து எதுவும் மாறும்
ஆற்று வெள்ளம் போன பின்னாலே
அமைதி கொள்ளும் வெண்மணல் போலே
நேற்று துன்பம் நாளை விலகும்
நெஞ்சம் முழுதும் நிம்மதி ஆகும்
ஆற்று வெள்ளம் போன பின்னாலே
அமைதி கொள்ளும் வெண்மணல் போலே
நேற்று துன்பம் நாளை விலகும்
நெஞ்சம் முழுதும் நிம்மதி ஆகும்
சிரிப்பு பாதி அழுகை பாதி
சேர்ந்ததல்லவோ மனித ஜாதி
இன்று உன் மரத்தில் இலையுதிர் காலம்
இனி வரும் காலம் துளிர் விடும் காலம்
பூவும் பிஞ்சும் காயும் கனியும்
பொறுமை கொண்டால் மறுபடி தோன்றும்
நெருப்பு பாதி நீரும் பாதி
நிறைந்ததல்லவோ உலக நீதி
சிரிப்பு பாதி அழுகை பாதி
சேர்ந்ததல்லவோ மனித ஜாதி
