மலரோடு விளையாடும்

பாடியவர்: பி.பி. ஸ்ரீனிவாஸ், எஸ். ஜானகி

இயற்றியவர்:

இசை:

திரைப்படம்: தெய்வ பலம்

ம்..........................
மலரோடு விளையாடும் தென்றலே வாராய்
மலரோடு விளையாடும் தென்றலே வாராய் - தன்
வசம் இழந்த உள்ளம் குளிர இன்பமே தாராய் மன
மயக்கமே தீராய்
மலரோடு விளையாடும் தென்றலே வாராய்

மலரோடு விளையாடும் தென்றலே வாராய்
மலரோடு விளையாடும் தென்றலே வாராய் - தன்
வசம் இழந்த உள்ளம் குளிர இன்பமே தாராய் மன
மயக்கமே தீராய்
மலரோடு விளையாடும் தென்றலே வாராய்

அரும்பைத் தீண்டு அன்பாலே
அழகாய் மலரவும் செய்கின்றாய்
குறும்புகள் ஏனோ என்னிடம் என்
குறையை நீயும் தீராயோ
மலரோடு விளையாடும் தென்றலே வாராய்

இரவில் நிலவை வீண்மீனை
பிரிக்கும் முகிலைக் கலைக்கின்றாய்
குறும்புகள் ஏனோ என்னிடம் என்
குறையை நீயும் தீராயோ
மலரோடு விளையாடும் தென்றலே வாராய்

குலுங்கும் முல்லைக் கொடி தாவி
கொம்பைத் தழுவிடச் செய்கின்றாய்
குறும்புகள் ஏனோ என்னிடம்
குறும்புகள் ஏனோ என்னிடம் என்
குறையை நீயும் தீராயோ
மலரோடு விளையாடும் தென்றலே வாராய்

விரும்பும் இருவர் மனநிலையை
விளக்கும் தூதன் நீயன்றோ
குறும்புகள் ஏனோ என்னிடம்
குறும்புகள் ஏனோ என்னிடம் என்
குறையை நீயும் தீராயோ
மலரோடு விளையாடும் தென்றலே வாராய்

மலரோடு விளையாடும்






Designed and maintained by AKR Consultants