பூங்காத்து திரும்புமா
பாடியவர்: மலேசியா வாசுதேவன்,
இயற்றியவர்:
இசை: இளையராஜா
திரைப்படம்: முதல் மரியாதை
பூங்காத்து திரும்புமா என் பாட்டை விரும்புமாபாராட்ட மடியில் வைச்சுத் தாலாட்ட
எனக்கொரு தாய் மடி கெடைக்குமா
பூங்காத்து திரும்புமா என் பாட்டை விரும்புமா
ராசாவே வருத்தமா
ராசாவே வருத்தமா ஆகாயம் சுருங்குமா
ஏங்காதே அத உலகம் தாங்காதே
அடுக்குமா சூரியன் கருக்குமா
என்ன சொல்லுவேன் என்னுள்ளம் தாங்கல்லே
மெத்தை வாங்குனேன் தூக்கத்தை வாங்கல்லே
இந்த வேதனை யாருக்குத் தான் இல்லை
ஒன்ன மீறவே ஊருக்குள் ஆளில்ல
ஏதோ என் பாட்டுக்கு நான் பாட்டப் பாடி
சொல்லாத சோகத்தைச் சொன்னேனடி
சுகராகம் சோகந்தானே சுகராகம் சோகந்தானே
யாரது போறது?
குயில் பாடலாம் தன் முகங்காட்டுமா?
பூங்காத்து திரும்புமா என் பாட்டை விரும்புமா
பாராட்ட மடியில் வைச்சுத் தாலாட்ட
எனக்கொரு தாய் மடி கெடைக்குமா
உள்ளே அழுகுறேன் வெளியே சிரிக்கிறேன்
நல்ல வேஷந்தான் வெளுத்து வாங்குறேன்
சொந்த வேஷந்தான் கொஞ்சம் மாறணும்
எந்த சாமிக்கு மகுடம் ஏறணும்
மானே என் நெஞ்சுக்குப் பால் வார்த்த தேனே
முன்னே என் பார்வைக்கு வாவா பெண்ணே
எசப்பாட்டு படிக்கும் நானே
எசப்பாட்டு படிக்கும் நானே
பூங்குயில் யாரது?
கொஞ்சம் பாருங்க பெண் குயில் தானுங்க
அடி நீ தானா அந்தக் குயில்?
யார் வீட்டு சொந்தக் குயில்?
ஆத்தாடி மனசுக்குள்ள காத்தாடி
பறந்ததே உலகமே மறந்ததே
நான் தானே அந்தக் குயில்
தானாக வந்த குயில்
ஆத்தாடி மனசுக்குள்ள காத்தாடி
பறந்ததா உலகந்தான் மறந்ததா?
| This feature is powered by Dishant.com - Home of Indian Music |
