பிறக்கும்போதும் அழுகின்றாய்

பாடியவர்: ஜே.பி. சந்திரபாபு

இயற்றியவர்:

இசை:

திரைப்படம்: கவலை இல்லாத மனிதன்

பிறக்கும்போதும் அழுகின்றாய்,
இறக்கும்போதும் அழுகின்றாய்,
ஒரு நாளேனும் கவலையில்லாமல்
சிரிக்க மறந்தாய் மானிடனே.
ஒரு நாளேனும் கவலையில்லாமல்
சிரிக்க மறந்தாய் மானிடனே.

பிறக்கும்போதும் அழுகின்றாய்,
இறக்கும்போதும் அழுகின்றாய்,

இரவின் கண்ணீர் பனித்துளி என்பார்,
முகிலின் கண்ணீர் மழை எனச் சொலவார்,
இரவின் கண்ணீர் பனித்துளி என்பார்,
முகிலின் கண்ணீர் மழை எனச் சொலவார்,
இயற்கை அழுதால் உலகம் செழிக்கும்,
மனிதன் அழுதால் இயற்கை சிரிக்கும்
இயற்கை சிரிக்கும்

பிறக்கும்போதும் அழுகின்றாய்,
இறக்கும்போதும் அழுகின்றாய்,

அன்னையின் கையில் ஆடுவது இன்பம்,
கன்னியின் கையில் சாய்வததுமின்பம்,
அன்னையின் கையில் ஆடுவது இன்பம்,
கன்னியின் கையில் சாய்வததுமின்பம்,
தன்னையறிந்தால் உண்மையில் இன்பம்,
தன்னலம் மறந்தால் பெரும் பேரின்பம்.
பெரும் பேரின்பம்

பிறக்கும்போதும் அழுகின்றாய்,
இறக்கும்போதும் அழுகின்றாய்,
ஒரு நாளேனும் கவலையில்லாமல்
சிரிக்க மறந்தாய் மானிடனே.

This feature is powered by Dishant.com - Home of Indian Music






Designed and maintained by AKR Consultants